கோபதாபங்களை வீசியெறிந்துவிட்டு இனமானங்காத்திட கட்சித் தலைவர்கள் ஒன்றுபடவேண்டும் ஐ.பி.எப் உத்தாமா கட்சி வேண்டுகோள் மு.வ.கலைமணி

கோபதாபங்களை வீசியெறிந்துவிட்டு இனமானங்காத்திட கட்சித் தலைவர்கள்  ஒன்றுபடவேண்டும்
ஐ.பி.எப் உத்தாமா கட்சி வேண்டுகோள்

மு.வ.கலைமணி.

பினாங்கு, மே 25-
மலேசிய வாழ் இந்திய மாணவ மாணவியர்களுக்கான  மெட்டிரிக் கல்லூரி வாய்ப்புகள் நம்பிக்கையை நிறைவுச் செய்யும் என்ற மலேசிய கல்வி அமைச்சரின் உறுதிமொழி என்னவானது?

ADVERTISEMENT


 ADVERTISEMENT

தேசிய முன்னணி காலத்தில் 25,000- மாணவர்களுக்கான இடங்களில்
மலேசிய இந்தியர்களுக்கு என 9 விழுக்காடு அதாவது 2,200 இடங்கள் இருந்தது.
இன்றைய நம்பிக்கை கூட்டணியால்
மேலும் 15,000 இடங்களை அதிகரித்து
40 ஆயிரமாக உயர்த்தப்பட்டதில்
10 விழுக்காடு இடங்கள் பூமிபுத்ரா அல்லாதாருக்கு என்ற உறுதிமொழி என்னவானது என்று மலேசிய ஐ.பி.எப் உத்தாமா கட்சியின் தேசியத் தலைவர் மு.வீ.மதியழகன் கேள்வி எழுப்பினார்.

அரசாங்கம் மெட்டிரிக் வாய்ப்புகள் தொட்டு யாரும் கேள்வி எழுப்பிட வேண்டாம்
என்றால் இந்திய மாணவர்களின் நிலைதான் என்ன?

2019-ம் ஆண்டு தேர்வில் இதுவரையிலும்
எத்தனை மாணவர்களுக்கு வாய்ப்பு வழக்கப்பட்டுள்ளது என்பதை கல்வி அமைச்சு வெளிட வேண்டும்.

நாளுக்கு நாள் சரிந்துக் கொண்டிருக்கும் உரிமை, உடமை, உணர்வு,
மரபு, தொன்மை, வரலாறு,
இனம், மொழி, சமயம்,
கலை, கலாச்சாரம், பண்பாடு,
வாழ்வியல், அறிவியல், கல்வி,
அரசியல், பொருளாதாரம், வேலை வாய்ப்பு,
நீதி, நேர்மை, சமசீர்முறை,
சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு,
இப்படியான அடிப்படைகள்
இதுகாரும் நாடு கண்டிராத சரிவை நோக்கி மலேசிய இந்தியர்களின் நிலைபாடு போகின்றது,

ஆளும் கட்சி - எதிர்க்கட்சி- நடுநிலையாளர் என ஆளுக்கொரு கருத்தை முன் வைத்து வீண் சண்டையிட்டு காலங்கடத்துவதை விட்டுவிட்டு, இன்று நாட்டின் பிறயின மூகத்திற்கீடான உரிமைகளை மீட்டெடுத்திட
தலைவர்கள் பிரிவு பேதமில்லாது
அனைத்து இந்தியர் கட்சிகளின்  கூட்டங்களை கூட்டி அதிரடியாக மேற்குறிப்பிட்டவற்றை சரி செய்தாக வேண்டும்.

கட்சி -, கொடி -, சட்டை , சண்டை - கொள்கை இப்படி யாவற்றையும் ஒருபொழுது  ஓரங்கட்டி வைத்துவிட்டு, ஒரே குரலாக இந்திய தலைவர்கள் இணைந்து உரிமைக்கு குரலெழுப்பிட வேண்டும்.

அதற்கு
நாட்டின் எதிர்க்கட்சி வரிசையில்
மஇகாவும், ( மாண்புமிகு டான்ஸ்ரீ  விக்னேஷ்வரன் ) ஆளும்கட்சி வரிசையில்
பிரதமர்துறை அமைச்சும் ( மாண்புமிகு பி.வேதாமூர்த்தி ) இருவரும் முன்வரவேண்டும்.

நாட்டில் பணமில்லை,
பொருளாதார நெருக்கடி,
கடன் சுமை,
புதிய திட்டமிடல் சாத்தியமாகாது,
கஜானா காலி,
என நாட்டு மக்களிடம் சொல்லி,
கடனை அடைத்திட தபோங் ஹாராப்பான் என நிதி திரட்டிய இந்த அரசாங்கம்,

சமீபத்தில் அந்நிய நாட்டு மாணவர்களை கொண்டு வந்து பல்கலைக்கழக வாய்ப்பிற்கு நிதி ஒதுக்கீடு செய்திட முன்வந்திருப்பது எப்படி?

இந்தியர்களுக்கான கல்வியின்
உரிமையை கேட்காதீர்,
அரசாங்கம் கொடுப்பதை எடுத்துக்கொள் என்றால், தலைமையை பிடித்து ஆட்சியை அமைத்து அமைச்சர்களாகவும் இருப்பவர்கள் இன்னமும் வாய்மூடி
மௌனச் சாமியார்களாக இருந்து விடுவார்களேயானால்,

நாளைய மலேசியாவில்  பிற இனத்தவர்கள்
இடத்தில் இந்தியர்களும்,

இந்தியர்களது இடத்தில்
அந்நியர்களும் உரிமைபெற்ற மூன்றாம் நிலை
குடிமக்களாக்கப்பட்டு,

இந்தியர்களோ நான்காம்தர குடிமக்களாக
மாறிபோவோமோ என்ற அச்சம்
நிலவுகிறது.

அதிரடி முடிவுக்கு
அதிகாரத்துவ கட்சிகளும்
கட்சித் தலைவர்களும் கோபதாபங்களை வீசியெறிந்து விட்டு இனமானம் காத்திட
ஒன்றுபட வேண்டும் என
முவீ.மதியழகன் கேட்டுக் கொண்டார்.

Comments