"புலனாய்வு" திரைப்படம் நல்ல அனுபவத்தை தேடித் தந்தது மலேசிய ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் -டத்தின்ஸ்ரீ ஷைலா நாயர்

"புலனாய்வு" திரைப்படம் நல்ல அனுபவத்தை தேடித் தந்தது
மலேசிய ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும்
-டத்தின்ஸ்ரீ ஷைலா நாயர்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 8-
"புலனாய்வு" திரைப்படம் நல்ல அனுபவத்தை தேடித் தந்ததுள்ளது. இதில் நடித்த சககலைஞர்களுடன் கதாபாத்திரங்களாக பயணிக்கும் போது சுவாரஸ்யமாக இருந்ததாக "புலனாய்வு" திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள ஷைலா நாயர் கூறினார்.

"புலனாய்வு" எனது மூன்றாவது படம். முந்தைய இரண்டு படங்களான "மைந்தன்", "மயங்காதே" படங்களில் நடித்திருந்தாலும் இப்படத்தில் நல்ல அனுபவத்தோடு நடித்தேன் என்று கூறிவிட முடியாது. தொடர்ந்து படங்களில் நடிக்கும் போது அனுபவம் கிடைக்கும். அந்த வகையில் "புலனாய்வு" திரைப்படம் நல்ல அனுபவத்தை தேடித்தந்துள்ளதாக ஷைலா நாயர் தெரிவித்தார்.

இப்படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கிறேன். இதில் உடல் பாவனை மிகவும் முக்கிய அம்சமாக இருந்தது. நான் பேசிய வசனங்களைவிட உடல் பாவனைக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டியிருந்தது. கண்ணிமைப்பது, ஒரக்கண்ணில் பார்ப்பது, கோபத்தில் பார்ப்பது, துப்பாக்கி ஏந்துவது என்று பல பாவங்களை செய்ய வேண்டியிருந்தது. இதில் சிறப்பாக நடித்திருந்தேன் என்று நம்புகிறேன் என்றார் ஷைலா நாயர்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

ஷாலினி பாலசுந்தரம் சதிஷ் இணை இயக்கத்தில் "புலனாய்வு" படப்பிடிப்பு மிகவும் சுவாரஸ்யமாக நடந்து முடிந்தது. படப்பிடிப்பு தளத்தில் ஒரு குடும்பமாக இருந்து நடித்தோம். என்னோடு பயணித்த காவல் துறை கதாபாத்திரங்கள் மிகவும் சிறப்பாக செய்தனர். இப்படம் ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் என்று ஷைலா சொன்னார்.

நாம் எந்த கதாபாத்திரங்களாக இருந்தாலும் அதை ஏற்று திறமையைக் காட்ட வேண்டும். திறமையான நடிப்புக்கு கண்டிப்பாக அங்கீகாரம் கிடைக்கும். ஆகையால்  மலேசிய ரசிகர்கள் இப்படத்திற்கு பேராதரவு வழங்குவார்கள் என்று நம்புவதாக ஷைலா நாயர் குறிப்பிட்டார்.

நாட்டில் புகழ்ப்பெற்ற பாடகியான ஷைலா நாயர் பாடும் துறையில் நீண்ட காலம் அனுபவம் பெற்றவர். தற்போது நடிப்புத் துறையில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது மூன்றாவது படமான "புலனாய்வு" வெற்றியைக் குவிக்க தேசம் வாழ்த்துகிறது.

Comments