ஆலயங்களில் தர்மம் செய்யவும் உண்டியல் வையுங்கள்! அகம அணி தலைவர் அருண் துரைசாமி ஆலோசனை

ஆலயங்களில் தர்மம் செய்யவும் உண்டியல் வையுங்கள்!
அகம அணி தலைவர் அருண் துரைசாமி ஆலோசனை

குணாளன் மணியம்

பெட்டாலிங் ஜெயா, மே 28-
ஆலயங்களில் தர்மம் செய்யவும் உண்டியல் வைக்க வேண்டும் என்று அகம அணி தலைவர் அருண் துரைசாமி ஆலோசனை கூறியுள்ளார்.

ஆலயங்களில் தற்போது வைக்கப்பட்டிருக்கும்  உண்டியல் ஆலய பராமரிப்பு செலவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.  இந்நிலையில் இன்னொரு உண்டியலும் தர்மம் செய்ய வைக்கப்பட வேண்டும்.

மக்கள் தர்ம உண்டியலில் செலுத்தும்  பணத்தை வாரம்தோறும் ஏழை எளிய மக்களுக்கு தர்மம்  செய்ய பயன்படுத்த வேண்டும் என்று அருண் துரைசாமி கேட்டுக் கொண்டார்.

ஆலயங்கள் வழிபாட்டுத் தலமாக மட்டும் இல்லாமல் மக்களுக்கு குறிப்பாக ஏழை மக்களுக்கு உதவிகள் செய்யும் இடமாகவும் இருக்க வேண்டும்.

நாடு தழுவிய நிலையில் இருக்கும் ஆயிரக்கணக்கான ஆலயங்களில் இரண்டாவது தர்ம உண்டியல் வைக்கப்பட வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் நிதி முற்றிலும் ஏழை மக்களுக்கு உதவி வழங்க பயன்படுத்தப்பட வேண்டும். முதல் கட்டமாக 500 ஆலயங்களில் இத்திட்டம் நடைமுறை படுத்தப்படும் என்று அருண் துரைசாமி சொன்னார்.

Comments