தன் வலி - தன் பசி - தன் விருப்பம் - தன் சுகம் பாராது பிள்ளைகளுக்காகவே வாழும் அன்னையைப் போற்றுவோம்! டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அன்னையர் தின வாழ்த்து

தன் வலி - தன் பசி - தன் விருப்பம் - தன் சுகம் பாராது பிள்ளைகளுக்காகவே வாழும் 
அன்னையைப் போற்றுவோம்!
டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் 
அன்னையர் தின வாழ்த்து

கோலாலம்பூர், மே 11-உயிர் கொடுத்து, உதிரம் ஊட்டி, உள்ளத்தில் சுமந்த அன்னையின் அன்புக்கு ஈடு ஏதுமில்லை என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன்  அன்னையர் தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

நமது தேவைகளை நிறைவேற்றுவதற்கு கோயிலுக்குச் சென்று வழிபடுகிறோம். அதனால்தான் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே நமது முன்னோர்கள் தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை என்று கூறிச் சென்றனர்.

தாய்மைக் குணங் கொண்ட தாய் என்பவள் தன் வலி - தன் பசி - தன் விருப்பம் - தன் சுகம் எதனையும் பாராமல் பிள்ளைகளின் உயர்வை மட்டுமே உயிராகக் கொண்டு வாழ்ந்து வருபவள். எந்நிலையிலும் தன்னிலை மறந்து உறங்கிடாது, பிள்ளையின் நலனில் உயிர்க் கொடுத்து காத்திடுவாள்.

அவளின் எண்ணங்கள் – செயல்கள் அனைத்தும் அவள் பெற்றப் பிள்ளைகள் மீதே தனித்து நின்றிருக்கும்.
ஒரு தாயின் அர்ப்பணிப்பான உணர்வாலும், திறனாலுமே குடும்பம் உயரும். இவ்வாறு குடும்பங்கள் உயர்ந்தால் ஒரு சமுதாயம் உயரும்.  என்பதனை மனத்தில் ஆழமாக பதிவு செய்துக் கொள்வது அவசியமாகும்.

இத்துணைச் சிறப்புக்களை கொண்டுள்ள தாயை – அவளது தாய்மையைப் போற்றுவது பிள்ளைகளின் கடமையாகக் கொள்ள வேண்டும்.

ஆனால், இந்த நவீன உலகத்தில் ஒருசில பிள்ளைகள் தங்களது வாழ்க்கையை மட்டுமே கருத்தில் கொண்டு, பெற்றோர்களின் வாழ்க்கையையும் – அவர்களின் நலன்களையும் பேணாமல் அவர்களின் விருப்பம்போல் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்கின்றனர்.

சமுதாயத்தில் நிலவும் இந்த அவல நிலை மாற வேண்டுமென்று இந்த வேளையில் கேட்டுக் கொள்கிறேன். பாலூட்டி – சீராட்டி வளர்த்த அன்னையைப் போற்றுவோம், அரவணைப்போம்,  ஆராதிப்போம்  என்று நாடாளுமன்ற சபாநாயகருமான டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Comments