மலேசிய தொழிலாளர்களை ஜப்பானுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? உள்நாட்டு வேலைகள் வங்காளதேசிகளுக்கும் நேப்பாளிகளுக்குமா? சிலாங்கூர் தொழில்திறன் மையங்கள் சங்கத் தலைவர் ஐயப்பன் முனியாண்டி கேள்வி

மலேசிய தொழிலாளர்களை ஜப்பானுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன?
உள்நாட்டு வேலைகள் வங்காளதேசிகளுக்கும் நேப்பாளிகளுக்குமா? 
சிலாங்கூர் தொழில்திறன் மையங்கள் சங்கத் தலைவர் ஐயப்பன் முனியாண்டி கேள்வி

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 13-
மலேசிய தொழிலாளர்கள் 50 ஆயிரம் பேரை ஜப்பானுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன என்று
சிலாங்கூர் தொழில்திறன் பயிற்சி மையங்கள் சங்கத் தலைவர் ஐயப்பன் முனியாண்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

அப்படியானால் மலேசியாவில் இருக்கும் வேலைகளை வங்காளதேசிகளும் நேப்பாளிகளும் ஆக்கிரமிக்க மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் துணை போகிறாரா என்று ஐயப்பன் முனியாண்டி வினவினார்.

மலேசியாவில் இருக்கும் திறன்மிக்க தொழிலாளர்களை   ஜப்பானுக்கு அனுப்பி விட்டால் இங்குள்ள தொழில்திறன் வேலைகளை யார் கவனிப்பது என்பதை அமைச்சர் குலசேகரன் உணரவில்லையா என்று ஐயப்பன் முனியாண்டி கேட்டார்.

மலேசியாவில்  ஏற்கெனவே பல துறைகளை லட்சக்கணக்கான அந்நிய தொழிலாளர்கள் ஆக்கிரமித்து விட்டார்கள். இதனால் குற்றச்செயல் அதிகரித்தும் விட்டது. இந்நிலையில் மலேசிய தொழிலாளர்கள் ஜப்பானுக்கு அனுப்பப்பட்டால் அந்நிய தொழிலாளர்கள் இறக்குமதி அதிகமாகும். இதனால் யாருக்கு என்ன லாபம்? அமைச்சர் இதனை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்றார் ஐயப்பன் முனியாண்டி.

புதிய மலேசியாவில் அந்நிய தொழிலாளர்களை நம்பியிராமல் மலேசிய தொழிலாளர்களுக்கு பலதுறைகளில் பயிற்சி வழங்கி வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டிய கடப்பாடு குலசேகரனுக்கு உண்டு என்றாலும் அவர் மலேசியர்களுக்கு ஜப்பானில் வேலை தேடுகிறார்.

இதன் அவசியம்தான் என்ன?
உள்நாட்டு வேலைகளில் வங்காளதேசிகளையும் நேப்பாளிகளையும் அமர்த்த குலசேகரன் எண்ணம் கொண்டுள்ளாரா? முந்தைய அரசாங்கம் செய்த தவற்றை நடப்பு அரசாங்கம் செய்வதால் புதிய மலேசியா இலக்கை அடைய முடியாது என்று ஐயப்பன் முனியாண்டி சொன்னார்.

மலேசியாவில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பையும் வேலை செய்பவர்களுக்கு நியாயமான சம்பளத்தையும் உருவாக்கித் தர வேண்டும். அவர்களுக்கு போதிய பயிற்சி வழங்கி தொழில்திறனாளர்களாக உருவாக்க வேண்டும். எச்ஆர்டிஎப்பில் அதிகமான நிதியுதவி இருந்தும் முதலாளிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்க முன் வராத அமைச்சர் ஜப்பானுக்கு தொழிலாளர்களை அனுப்புவது குறித்து பேசிக் கொண்டிருக்கிறார் அமைச்சர்.

ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் மலேசிய தொழிலாளர்களுக்கு பல  பிரச்சினைகள் உள்ளன. முதலில் சிதோஷ்ண நிலை முக்கியப் பிரச்சினையாகும். அதன்பிறகு உணவு, மொழி ஆகிய பிரச்சினைகளும் இருக்கின்றன. வெளிநாடு என்றால் வேலைக்கு செல்லத் தயாராக இருப்பார்கள். ஆனால், நாம்தீன் பிரச்சினைகளை சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்று ஐயப்பன் முனியாண்டி கேட்டுக் கொண்டார்.

மலேசியாவில் 35 விழுக்காடு தொழில்திறனாளர்கள் இருந்தால் மட்டுமே 2020இல் மலேசியாவை மேம்பாடடைந்த நாடாக உருவாக்க முடியும். ஆனால், தொழில்திறனார்களை ஜப்பானுக்கு அனுப்பி வைத்தால் எப்படி புதிய மலேசியாவை உருவாக்க முடியும். அமைச்சருக்கு இதுகூடவா தெரியாது என்று ஐயப்பன் முனியாண்டி கேள்வி எழுப்பினார்.

ஆகையால், மனிதவள அமைச்சர் குலசேகரன் மலேசிய தொழிலாளர்களுக்கு மலேசியாவிலேயே வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்று சிலாங்கூர் தொழில்திறன் பயிற்சி மையங்கள் சங்கத் தலைவர் ஐயப்பன் முனியாண்டி வலியுறுத்தினார்.

Comments