"தேசம் மண்ணின் மைந்தர்கள்" புருவத்தை உயர்த்த வைக்கும் " ஒரு கதை சொல்லட்டா சார்"(OKSS) வியக்க வைக்கும் அறிமுக காணொளி

"தேசம் மண்ணின் மைந்தர்கள்"
புருவத்தை உயர்த்த வைக்கும் " ஒரு கதை சொல்லட்டா சார்"(OKSS)
வியக்க வைக்கும் அறிமுக காணொளி

குணாளன் மணியம்

கோலாலம்பூர், மே 12-
மலேசியாவிலும் ஒரு "பாகுபலி"யை உருவாக்கும் இயக்குநர்கள் இருக்கிறார்கள்  என்பதை " ஒரு கத சொல்லட்டா சார்" திரைப்படத்தின் வழி நிரூபித்துள்ளார் காஷ் வில்லன்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

"ஒரு கதை சொல்லட்டார் சார்" இன்னும் திரைக்கு வராத திரைப்படம். அதன் கதை என்ன என்று யாருக்கும் தெரியாது. அது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று மே 11 இரவு 7.00 மணி முதல் வலைக்காட்சி எனப்படும் இயூ டியூப்பில்  பதிவேற்றம் செய்யப்பட்ட "ஒரு கதை சொல்லட்டா சார்" திரைப்பட அறிமுக காணொளி பார்ப்போர் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.

ரசிகர்களை வியக்க வைக்கும் திரைப்பட அறிமுக காணொளி திரைப்படத்தின் ஆழத்தை எடுத்துக் காட்டியுள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோர் பதம் என்பார்கள். அதைப் போல் சில நிமிட காணொளி படத்தின் பல மடங்கு தரத்தை எடுத்துக் காட்டியுள்ளது.

'ஒகேஎஸ்ஸ்" (OKSS) திரைப்படம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு என்றார் காஷ் வில்லன். "ஒகேஎஸ்எஸ்" என்றால் என்ன என்வென்று தலையை பிய்த்துக் கொண்டேன். இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என்று பல யுகங்களை தாண்டி "ஒரு கதை சொல்லட்டா சார்" என்று காஷ் வில்லன் சொன்ன போது ஒரு கணம் திகைத்துதான் போனேன்.

"ஒரு கதை சொல்லட்டா சார்" இந்த ஆண்டு இறுதிக்குள் திரையேறும். மலேசிய "மக்கள் நாயகன்" சி.குமரேசன், மலேசிய "சூப்பர் ஸ்டார்" காஷ் வில்லன், மலேசிய "தளபதி" பென்ஜி, மலேசிய "நகைச்சுவை இளவரசன்"  சத்யா, மலேசிய "வில்லன்" விகடகவி மகேன்,  மலேசிய "நகைச்சுவை புயல் " சேம்", மலேசிய "கலைவேந்தன்" கவிமாறன், மலேசிய "பாட்டு நாயகன்" லோக்கப் நாதன், ராகா உதயா உள்ளிட்ட பல மலேசிய பிரபலங்கள் நடித்துள்ள "ஒரு கதை சொல்லட்டா சார்" திரைப்படத்தின் கலைநுட்ப வேலைகளை வீராஜி மேற்கொண்டுள்ளார்.

"ஒரு கதை சொல்லட்டா சார்" திரைப்படத்தின் அறிமுக காணொளியே புருவத்தை உயர்த்த வைத்துள்ளதால், இப்படம் ஒரு மலேசிய "பாகுபலி" என்று துணிந்து கூறலாம்.

ரசிகர்கள் இயூடியூப்பில் அறிமுக காணொளியை பார்த்தால் " ஒரு கதை சொல்லட்டா சார்" மகிமை புரியும்.

இப்படம் குறித்து காஷ் வில்லன், சி.குமரேசன், வீராஜி உள்ளிட்ட கலைஞர்கள் என்ன சொல்கிறார்கள்? அடுத்த செய்தியை படிக்கத் தவறாதீர்கள்.

Comments