பத்மஸ்ரீ கே.எஸ்.சின்னக்குயில் சித்ரா பங்கேற்கும் இன்னிசை இரவு! பெட்டாலிங் ஜெயா சிவிக் சென்டரில் ஜூன் 15இல் நடைபெறும்

பத்மஸ்ரீ கே.எஸ்.சின்னக்குயில் சித்ரா பங்கேற்கும் இன்னிசை இரவு!
பெட்டாலிங் ஜெயா சிவிக் சென்டரில் ஜூன் 15இல் நடைபெறும்

கோலாலம்பூர்,ஜூன் 14-
பத்மஸ்ரீ கே.எஸ்.சின்ன குயில் சித்ரா பங்கேற்கும் மாபெரும் இன்னிசை இரவு ஜூன் 15 வெள்ளிக்கிழமை
பெட்டாலிங் ஜெயா சிவிக் சென்டரில் நடைபெறவிருப்பதாக அதன்
ஏற்பாட்டாளர் மணிவண்ணன் கூறினார்.

இந்திய தமிழ் சினிமா உலகில் கொடிக்கட்டி பறந்த பின்னனிப் பாடகியான சின்னக்குயில் சித்ராவின் திறமைக்கு கிடைத்தது "பத்மஸ்ரீ" விருது. இத்தகையவரை சிறப்பிக்கும் வகையில் சின்னக்குயில் சித்ராவின் இன்னிசை இரவு நாளை ஜூன் 15 சனிக்கிழமை பெட்டாலிங் ஜெயா சிவிக் சென்டரில் நடைபெறுவதால் அதற்கான டிக்கெட்டுகளை வாங்கி ஆதரவு தரும்படி மணிவண்ணன் கேட்டுக் கொண்டார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

சின்னக்குயில் சித்ராவுடன் சென்னை பாடகர்கள் ரூபா ரேவதி, சுவகதா, ஆனந்த் அரவிந்த்டக்‌ஷன், மலேசியக் கலைஞர்கள் மணிவண்ணன், கவிமாறன் ஆகியோரும் பாடவிருப்பதாக அவர் சொன்னார்.

ஒரு பிரமாண்ட இன்னிசை விழாவாக அமையவிருக்கும் இந்நிகழ்வில் சின்னக்குயில் சித்ரா பாடிய பாடல்கள் அவரே பாடுவார். மேலும் பல புகழ்ப்பெற்ற பாடல்கள் இந்த இன்னிசை நிகழ்ச்சியில் இடம்பெறும். டிக்கெட் தொடர்புக்கு-016-478 3189, 0102458517


Comments