203 ஆண்டுகால வரலாற்று பதிவை கொண்ட முத்து மாரியம்மன் ஆலயம் மீது இந்து வழக்கா?

203 ஆண்டுகால வரலாற்று பதிவை கொண்ட
முத்து மாரியம்மன் ஆலயம் மீது
இந்து வழக்கா?

மு.வ.கலைமணி

பினாங்கு, ஜூன் 15-
வேலியே பயிரை மேய்ந்த கதையாக
பத்து கவான் மாரியம்மன் கோவிலின்  இன்றைய  நிலைபாடு அமைந்துள்ளது.

கடந்த  202ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நாளான 14/06/2019-ல் பினாங்கு உயர் நீதிமன்றத்தில் நிற்கின்றோம், மாரியம்மனுக்கு  எதிராவும், ஆலய ஆட்சிக் குழுவிற்கு எதிராகவும், இவர்களிடத்தில் எட்டு மில்லியன் நட்டஈடு  கேட்டு " எக்கோ ஹேரோசன் வீடமைப்பு நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது என்று மு.வீ.மதியழகன் கூறினார்.

அம்மன் மீதே வழக்கு விசாரணை நடப்பதை கண்டு அதிர்ந்துபோய் நிற்கின்றோம்.ஒரு காலத்தில் அமைதி பூங்காவாக இருந்த பத்து கவான் 2008-ன் ஆட்சி மாற்றத்தில் இருந்து நாளுக்கொரு கொடுமையாக, கோவில் மீது நான்காவது நீதிமன்ற வழக்கு விசாரணை இன்று நடக்கிறது.

இந்த வழக்கு விசாரணையின் பின்னணியில் மாநில அரசாங்கமும்,
பினாங்கு இந்து அறப்பணிவாரியமும் இருப்பதை நன்கறிவோம்.

கோவிலை உடைத்தெறியும் வழக்கில் தோல்வியுற்ற வீடமைப்பு நிறுவனம், தன் தோல்வியை ஏற்க முடியாது போனதால் குறுக்கு வழியில், மீண்டும் கோவிலை இடித்துவிட இன்னொரு வழக்கு இது.

இம்முறை  சாமானியர்களோடு
அகிலாண்டகோடி முத்து மாரியம்மன் மீதும் வழக்கு போடப்பட்டிருப்பதை வர்ணித்திட வார்தைகளில்லை,

ஒவ்வொரு தீமிதி திருவிழாவையும் நடத்திட விடாது தொடர்ந்து 2009-திலிருந்து பத்து வருடமாக வழக்குமேல் வழக்காக ஏழை எளியவர்களை வாட்டி வதைப்பதோடு தமிழர்கள் அடையாளத்தை அழித்து அந்நியர்க்கு வாழ்வளித்திட துடிக்கும் இந்தியர் தலைவர்கள்,

உபதேசம் என்பது ஊருக்காக மட்டுமே என்ற கொள்கையில் பாராளுமன்ற உறுப்பினர்கள்,
துணை முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள்,
மாநில மாவட்ட தலைவர்கள் இப்படி நீழுகிறது பக்காத்தான் தலைவர்களின்  பட்டியல்.

முதன் முதலில் வழிகாட்டியாக பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பி.ராமசாமி தலைமையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் துவக்கிய வன்கொடுமை கலாச்சாரமானதுதான் கோவில் மீது வழக்காடும் கலாச்சாரம்.

அதனை தொடர்ந்து பெனாகா பெசோனா வீடமைப்பு  நிறுவனம்.
அதன் பின்னர் எக்கோ ஹேரோஷன் வீடமைப்பு நிறுவனம். இப்படியாக  வரிசைக்கட்டி வழக்காடி படுந்தோல்வி கண்டதால் பழிதீர்க்கும் படலமாக இன்றய வழக்கும் தொடர்கிறது.

கேட்டு மீட்க நாதியற்று பினாங்கு மாநிலத்தில் இந்தியர்களின் அடையாளங்கள்  அழிக்கப்படுகிறது என ஆலய அறங்காவலர் மு.வீ.மதியழகன் அறிக்கையின் வழி தெரிவித்தார்.

Comments

  1. For the unreasonable n unwarranted action,Goddess Mariamman would not let them go loose ,they wld b severely punished for their wrong doings,now n in their after life.
    Genma throgikal!

    ReplyDelete

Post a Comment