மலேசியாவின் முதல் கேம்போர்ட் திரைப்படம் "பரம்பதம்" களம் டீசர் ஜூன் 22இல் வெளியீடு மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற பரிந்துரை

மலேசியாவின் முதல் கேம்போர்ட் திரைப்படம் 
 "பரம்பதம்" களம் டீசர் ஜூன் 22இல் வெளியீடு
மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற பரிந்துரை

குணாளன் மணியம்

கோலாலம்பூர்,ஜூன் 21- விக்னேஷ் பிரபு இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் "பரம்பதம்" திரைப்படத்திற்கான  டீசர் எனப்படும் இரண்டாவது விளம்பர காணொளி ஜூன் 22 சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு பினாஸ் அரங்கில் வெளியீடு காணவுள்ளது.

மலேசியாவின் முதல் கேம்போர்ட் திரைப்படமான "பரம்பதம்" மேற்கண்ட அங்கீகாரத்துடன் மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற பரிந்துரை செய்யப்பட்ட வேளையில் இதன் "களம்" எனும் இரண்டாவது டீசர் நாளை ஜூன் 22 இல் வெளியீடு காணவுள்ளது.

ADVERTISEMENT ADVERTISEMENT

இந்த "பரம்பதம்" திரைப்படத்தின் முதல் டீசரான பகடை அதிரடியான இசை, காட்சிகளுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகவும் பரபரப்பாக வெளியீடு கண்டது. வஜ்ரா கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்னேஷ் பிரபு எதிரிகளுடன் மோதும் காட்சிகள் இதில் பெற்றிருந்தன. மேலும் பென்ஜி, கவிமாறன், உமாகாந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள காட்சிகள் இந்த டீசரில் இடம்பெற்றிருந்தன.

மலேசிய திரைப்பட வரலாற்றில் ஒரு மாறுபட்ட படைப்பாக இவ்வாண்டு  வெளிவரவிருக்கும்  "பரம்பதம்" திரைப்படத்திற்கான இரண்டாவது டீசர் "களம்" வெளியிடப்படவுள்ளது. இந்த "பரம்பதம்" திரைப்படம் இதுவரை படப்பிடிப்பு நடத்தப்படாத பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளதால் இரண்டாவது டீசர் "களம்" எனும் பெயரில் வெளியீடு காண தயாராகி விட்டதாக அதன் இரண்டாவது இயக்குநர் விக்னேஷ் பி்ரபு தேசம் வலைத்தளத்திடம் தெரிவித்தார்.

இந்த களம் டீசர் எப்படி இருக்கும் என்பதால் களம் டீசரை பார்க்க மேலும் ஆர்வத்தை தூண்டுகிறது. இந்த "பரம்பதம்" களம் டீசர் மாறுபட்ட முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று எதிர்பார்க்கலாம்.  மலேசியாவின் முதல் கேம்போர்ட் திரைப்படம் என்ற பெருமையுடன் "பரம்பதம்" மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த "பரம்பதம்" திரைப்படம் மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெறுவது பொருத்தமான ஒன்று என்றுதான் கூற வேண்டும். அந்த வகையில் இப்படம் மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற தேர்வு செய்யப்பட்டு பரிந்துரையில் இருப்பதாக தெரிகிறது.

கடந்த 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகால சோழன் காலத்தில்  உருவாக்கப்பட்ட கேம் போர்ட்  விளையாட்டை "பரமபதம்" திரைப்படமாக செதுக்கியுள்ளார் விக்னேஷ் பிரபு.

இந்த "பரம்பதம்" திரைப்படம் சாய் நந்தினி மூவி வேல்ட் நிறுவனத்தின் சார்பில் முனைவர் லட்சப்பிரபு, முனைவர் சக்கரவர்த்தி தயாரிப்பில் வடித்துள்ள  விக்னேஷ் பிரபு இதன் டீசர் தயாரிப்பிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் மேற்கொண்டுள்ளார். இந்த "பரமபதம்" திரைப்படம்  வெற்றிநடை போட டீசர் அடித்தளம் அமைக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

Comments