சங்கநதியின் சரித்திர நாயகன் துன் சம்பந்தனுக்கு சுங்கை சிப்புட்டில் மாபெரும் நூற்றாண்டு விழா ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தலைமையில் நாளை ஜூன் 23இல் நடைபெறும் ஏற்பாட்டாளர் கி.மணிமாறன் தகவல்

சங்கநதியின் சரித்திர நாயகன் துன் சம்பந்தனுக்கு சுங்கை சிப்புட்டில் மாபெரும் நூற்றாண்டு விழா
ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தலைமையில் நாளை ஜூன் 23இல் நடைபெறும்
ஏற்பாட்டாளர் கி.மணிமாறன் தகவல்

சுங்கை சிப்புட்,ஜூன் 22- சஞ்சிக்கூலிகளாக கொண்டு வரப்பட்ட தமிழினத்தை தோட்டங்களுக்கு
உரிமையாளர்களாக்கிய மாபெரும் வரலாற்று நாயகன் துன் சம்பந்தன் மறைந்து 40
ஆண்டுகள் கடந்த நிலையில் அவரை நினைவுகூறும் வகையில் சுங்கைசிப்புட்டில் மாபெரும் நூற்றாண்டு விழா நடைபெறவிருப்பதாக அதன் ஏற்பாட்டாளர் கி.மணிமாறன் கூறினார்.

ADVERTISEMENT ADVERTISEMENT

"வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர்
யார்? மாபெரும் வீரர் மானம் காப்போர், சரித்திர தனிலே நிற்கின்றார்" எனும்
கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு ஒப்ப வாழ்ந்த காலத்தில் மக்கள் மனங்களில்
இடம்பிடித்த துன் சம்பந்தன் இன்னமும் காலத்தால் மறக்க முடியாத
தலைவராக  விளங்கி வருகிறார்.

சங்கநதியில் சரித்திர புகழுடன் உறங்கும் துன் சம்பந்தன் அவர்களை நினைவுகூறும் வகையில் ஜூன் 23இல் சுங்கை சிப்புட் தாமான் துன் சம்பந்தனில் மாபெரும் நூற்றாண்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. இதில் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் கலந்து சிறப்பிக்கவிருப்பதாக மணிமாறன் தெரிவித்தார்.

இந்த விழாவில் கடந்த ஜூன் 16இல் துன் சம்பந்தன் பிறந்தநாளை முன்னிட்டு நாளை ஜூன் 23 காலை 10.00 மணிக்கு தாமான் துன் சம்பந்தனில் உள்ள துன் சம்பந்தன் மண்டபத்தில் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தலைமையில் நடைபெறும்.

இதில் கடந்த ஜூன் 16இல் நடத்தப்பட்ட பல்வேறு போட்டி நிகழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கு டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் பரிசுகளை எடுத்து வழங்குவதோடு சிறப்புரையும் ஆற்றுவார் என்பதால் இந்நிகழ்வில் கலந்து கொள்ள அனைவருக்கும் மணிமாறன் அழைப்பு விடுத்தார்.

Comments