பிக்பாஸ் சீசன் 3இல் மலேசிய கலைஞர் முகேன் ராவ்

பிக்பாஸ் சீசன் 3இல் மலேசிய கலைஞர் முகேன் ராவ்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஜூன் 20
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுப்பில் உலக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் "பிக்பாஸ் சீசன் 3" எனும் பிக்பாஸ் மூன்றாவது தொகுப்பில் மலேசிய கலைஞர் முகேன் ராவ் பங்கேற்கிறார்.

பிக்பாஸ் சீசன் 3 ஜூன் 23 தொடங்கி விஜய் டிவியில் ஒளியேறவிருக்கிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மலேசியர்கள் யாராவது பங்கேற்பார்களா எனும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் குறிப்பாக கலைஞர்கள் மத்தியில் இருந்து வந்தது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3இல் மலேசிய கலைஞர் பங்கேற்கவிருப்பதாக தகவல் கசிந்தது. இதில் யார் பங்கேற்க போகிறார் எனும் கேள்விக்கு மத்தியில் மலேசிய கலைஞர் முகேன் ராவ் பங்கேற்கவிருப்பதாக விஜய் டிவி கலைஞர் ஒருவர் தேசம் வலைத்தளத்திடம் தெரிவித்தார்.

மலேசிய கலைத்துறையில் ஒரு பாடகராக வலம் வந்து கொண்டிருக்கும் முகேன் ராம் ராவ் ஆஸ்ட்ரோவில் கே.எல் டூ கேகே நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்தார்.

அறிவிப்பு செய்யும் திறன்கொண்ட முகேன் ராவ் பல சொந்த பாடல்களை பாடியிருக்கிறார்.

ADVERTISEMENT ADVERTISEMENT

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரது பங்கேற்பு சினிமா துறைக்கு வித்திடும் என்று எதிர்பார்க்கலாம்.

மலேசிய கலைத்துறையில் ஒரு சாதனையாளராக வலம் வந்து கொண்டிருக்கும் முகேன் ராவுக்கு தேசம் ஊடகத்தின் சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments