ஒற்றுமையை நிலைநாட்டி வாழ்க்கையில் மேம்படுவோம்! -செனட்டர் டத்தோ எம். சம்பந்தன் நோன்புப் பெருநாள் வாழ்த்து கோலாலம்பூர், ஜுன், 4-நோன்புப் பெருநாளை கொண்டாடும் அனைத்து மலேசியர்களுக்கும் ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ எம்.சம்பந்தன் ஈகைத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். முப்பது நாட்கள் நோன்பிருந்து இறைவனின் நல்லாசியுடன் இந்த நல்ல நாளை கொண்டாடும் மலேசிய முஸ்லிம்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய ஏற்றமிகு எதிர்காலம் உருவாக வேண்டும் என அவர் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியிருக்கின்றார். பல்லின கலாச்சாரத்தை நமது நாடு கொண்டிருக்கும் காலகட்டத்தில் நம்மிடையே நிலவும் ஒற்றுமை நமக்கான அடையாளம். அந்த அடையாளத்தை தொடர்ந்து நிலைநிறுத்த நாம் அனைவரும் முனைப்பு காட்ட வேண்டும். உலக நாடுகள் மத்தியில் மலேசியா என்றாலே ஒற்றுமை என்ற பொருள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அந்த ஒற்றுமை தான் நமது பலம். ஒன்றுபட்ட உன்னத மலேசியர்களாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஈகைத் திருநாளை கொண்டாடி மகிழ வேண்டும் என சம்பந்தன் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஒற்றுமையை நிலைநாட்டி வாழ்க்கையில் மேம்படுவோம்!
-செனட்டர் டத்தோ எம். சம்பந்தன் நோன்புப் பெருநாள் வாழ்த்து

கோலாலம்பூர், ஜுன், 4-நோன்புப் பெருநாளை  கொண்டாடும் அனைத்து மலேசியர்களுக்கும் ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ எம்.சம்பந்தன் ஈகைத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

முப்பது நாட்கள் நோன்பிருந்து இறைவனின் நல்லாசியுடன் இந்த நல்ல நாளை கொண்டாடும் மலேசிய முஸ்லிம்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய ஏற்றமிகு எதிர்காலம் உருவாக வேண்டும் என அவர் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியிருக்கின்றார்.

பல்லின கலாச்சாரத்தை நமது நாடு கொண்டிருக்கும் காலகட்டத்தில் நம்மிடையே நிலவும் ஒற்றுமை நமக்கான அடையாளம். அந்த அடையாளத்தை தொடர்ந்து நிலைநிறுத்த நாம் அனைவரும் முனைப்பு காட்ட வேண்டும்.
 
உலக நாடுகள் மத்தியில் மலேசியா என்றாலே ஒற்றுமை என்ற பொருள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அந்த ஒற்றுமை தான் நமது பலம். ஒன்றுபட்ட உன்னத மலேசியர்களாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஈகைத் திருநாளை கொண்டாடி மகிழ வேண்டும் என சம்பந்தன் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Comments