சென்னையில் கலைஞர் மு.கருணாநிதியின் 96ஆவது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் பங்கேற்பு

சென்னையில் கலைஞர் மு.கருணாநிதியின் 96ஆவது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் பங்கேற்பு

சென்னை தேசம் செய்தியாளர் வெங்கடேஷ்

சென்னை, ஜூன் 9-
சென்னையில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 96ஆவது பிறந்த நாள் விழா திமுக சார்பில் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

இந்த பிறந்தநாள் விழாவில் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் கலந்து கொள்ள ம.இ.கா பேராளர்களுடன் சென்னை சென்றார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் அவர்களை பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இந்த குழுவில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று ஜூன் 9 ஞாயிற்றுக்கிழமை சென்னை நேரம் இரவு 7.00  மணிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறும். இதில் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் சிறப்புரை வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments