மலேசியாவில் முதல் முறையாக ஆசிரம பிள்ளைகளுக்கு சமையல் கலை டிப்ளோமா தொழில்திறன் பயிற்சி ரவாங் ஸ்ரீ சாரதேவி இல்லம் வழங்குகிறது தலைவர் டாக்டர் குமரன் தகவல்

மலேசியாவில் முதல் முறையாக ஆசிரம பிள்ளைகளுக்கு சமையல் கலை  டிப்ளோமா
தொழில்திறன் பயிற்சி
ரவாங் ஸ்ரீ சாரதேவி இல்லம் வழங்குகிறது
தலைவர் டாக்டர் குமரன் தகவல்

குணாளன் மணியம்

ரவாங், ஜுன் 4-
மலேசியாவில் முதல் முறையாக ஆசிரம பிள்ளைகளுக்கு சமையல் கலை தொழில்திறன் பயிற்சியை
ரவாங் ஸ்ரீ சாரதேவி இல்லம் வழங்கி வருவதாக அதன்
தலைவர் டாக்டர் குமரன் கூறினார்.


கடந்த 1996 முதல் ரவாங்கில் செயல்பட்டு வரும் பெண் பிள்ளைகளுக்கான இந்த ஸ்ரீ சாரதாதேவி ஆசிரமத்தில் 3 முயது தொடங்கி 19 வயதுக்குட்பட்ட 25 பெண் பிள்ளைகள் இருந்து வருகின்றனர். இவர்கள் படிவம் 1,2,3,4,5 ஆகிய வகுப்புகளில் படித்து வருவதாகவும் இவர்களின் எதிர்கால நலன் கருதி படிவம் இரண்டு தொடங்கி அனைத்து பிள்ளைகளுக்கும் சமையல் கலை தொழில்திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் குமரன் தெரிவித்தார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT


ரவாங் ஸ்ரீ சாரதா தேவி ஆசிரம பிள்ளைகள் இங்குள்ள இடைநிலைப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளிப் படிப்பில் மட்டும் செலுத்தாமல் தொழில்திறன் கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக விட் கல்லூரியின் ஒத்துழைப்பில் சமையல் கலை தொழில்திறன் பயிற்சி பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி ஒருவருக்கு தலா 25 ஆயிரம் வெள்ளி செலவில் 25 பிள்ளைகளுக்கு மலேசிய விட் அகாடமி  கல்லூரி உபகாரச் சம்பளம் வழங்கியுள்ளதாக குமரன் சொன்னார்.

இதில் மாணவர்கள் கேக் செய்வது, இனிப்புப் பண்டங்கள் தயாரிப்பது, இதர சமையல் தொடர்பான பல விஷயங்களை கற்றுக் கொண்டு வருகின்றனர். அதேநேரத்தில் தோடு, சங்கிலி, கைச்சங்கிலி போன்ற அணிகலன்கள் தயாரிப்பதையும் கற்றுக் கொண்டு வருகின்றனர். இந்தப் பயிற்சிகள் யாவும் தங்களுக்கு பயனைத் தந்துள்ளதாகவும் இதற்காக ரவாங் ஸ்ரீ சாரதாதேவி இல்லத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கங்கா (வயது 18), கீர்த்தனா ( வயது 18), சங்கீதா ( வயது 19), கனகா ( வயது 18), தான்யா (வயது 17) ஆகியோர் தெரிவித்தனர்.

மலேசியாவில் முதல் முறையாக ரவாங் ஸ்ரீ சாரதா தேவி இல்லம் இப்பயிற்சியை ஆசிரமத்தில் வழங்குகிறது. இதன்வழி பள்ளிப் படிப்பு முடித்து வெளியேறும் மாணவர்கள் டிப்ளோமா சான்றிதழை கொண்டிருப்பார்கள். மேலும் கல்லூரி வழி ஆசிரம பிள்ளைகளுக்கு காய்கறி பயிர் செய்யும் பயிற்சியை யயாசான் வாஸ்பட ஹிஜாவ் இயக்கம்  வழங்குகிறது. அதன் தலைவர் இஸ்வாடி நேரில் பயிற்சி வழங்குகிறார். மேலும் யோகாசனம், ஓவியம் வரைதல், தியானம், தேவாரம், பாடும் திறன் போட்டி என்று பல பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது என்றார் குமரன்.

கடந்த 2012 முதல் ரவாங் ஸ்ரீ சாரதாதேவி இல்லத் தலைவராக இருந்து வரும் டாக்டர் குமரன் ஆசிரமத்தை நல்ல முறையில் வழி நடத்தி வருகிறார். மாணவிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறார். இவருக்கு துணைத் தலைவர் திருமதி தேவி, திலகா உள்ளிட்ட பலரும் துணை நின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புக்கு டாக்டர் குமரன் +60169067380,


Comments