இருநூறாண்டுகால பதிவைக் கொண்ட கலிடோனிய தோட்டப் பாட்டாளிகளின் குடியிருப்புகளில் பிரித்தாளும் கலாச்சாரங்கள் வேண்டாம்

இருநூறாண்டுகால பதிவைக் கொண்ட கலிடோனிய தோட்டப் பாட்டாளிகளின் குடியிருப்புகளில் பிரித்தாளும் கலாச்சாரங்கள் வேண்டாம்

மு.வ.கலைமணி

பினாங்கு, ஜூன் 4- மலேசியத் தமிழர்களின் வரலாற்று பதிவாக கொண்டு தேசிய முன்னணி அரசாங்கம் எதையெல்லாம் தக்க வைத்ததோ அதையெல்லாம் பக்காத்தான் அரசாங்கம் பறிக்கின்றது என ஐ.பி.எப் உத்தாமா கட்சியின் தேசியத் தலைவர் மு.வீ.மதியழகன் தெரிவித்தார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

தேசிய முன்னணி  காலத்தில் முன்னுரிமை தந்து தொழிலாளர்களின் சொந்த வீட்டுடமையான பாட்டாளிகளின் உரிமைகள், இன்றைய பக்காத்தான் ஆட்சியில் வருங்காலத்தில் இருக்காது,

பினாங்கு மாநிலம் நிபோங் திபால்
பாராளுமன்ற தொகுதி வாழ்
கலிடோனியா  தோட்ட தொழிலாளர்களது வீட்டுடமை நிலங்களை,
பினாங்கு மாநில அரசாங்கம்
தனியார் வீடமைப்பு நிறுவனம் ஒன்றுக்கு வர்த்தக
சொகுசு வீடமைப்பை திட்டத்தை
உருவாக்கிட முடிவாகிவிட்டது.
அதற்கான பணிகளும் முடுக்கியும்
விட்டுள்ளனர்.


இதன் நிலைபாட்டில்
பினாங்கின் குளுகோர் கம்போங்
புவா பாலாவிலும்,
பினாங்கு பத்து கவான் தோட்டத்திலும் அறங்கேறிய அதே கலாச்சாரமான
வேண்டப்பட்டர்களுக்கே வீடுகள்,
வேண்டாதவர்கள் மீது வழக்கு தொடுத்து வீதிக்கு விரட்டும் கொடுஞ் செயலை, மாநில அரசாங்கமும் தந்து பிள்ளையான வீடமைப்பு நிருவனமும்
கைவிட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

பூர்வீக குடிகளின் மீது பிரித்தாளும் கொள்கையை தினித்து
அறங்கேற்றும் கலாச்சாரத்தை மீண்டும் கலிடோனியாவிலும்
நடத்துவதை காணமுடிகிறது,

இன்று இங்கு 186- தோட்டத் தொழிலாளர் குடியிருப்போரில்,
136-பேருக்கு மட்டுமே
வீடுகள் என்றும், மீதமுள்ள 50-குடும்பத்தாருக்கு வீட்டுமனைகள் இல்லை என்பதை கட்டாயமாக்குவதை ஏற்க முடியாது.

2013-ம் ஆண்டு ஆயிரக்கணக்கான நிதி செலவிட்டு
32 தோட்டப் பாட்டாளிகளின் வீடடுகளை சீர்ச்செய்து தந்துள்ளதாக குறிப்புடும் மதியழகன்,
நாட்டின் முன்னால் பிரதமர்
டத்தோஸ்ரீ நஜீப் அவர்களிடத்தில் கோரிக்கை முன்வைத்து நிபோங் திபால் வட்டார வாழ் மக்களது வீட்டு கூரைகள் மாற்றவும், வர்ணம் தீட்டி அழகு படுத்தவும் 2.2 மில்லியன் கேட்டு அதனை ஒதுக்கீடு செய்தார் என்பது வரலாறு மட்டுமல்ல அவர்களை அங்கேயே நிரந்தர குடிகளாக வைத்திட ஆதாரமும் அதுதான் என நினைவுறுத்தினார்.

மேம்பாட்டு நிறுவனங்களுக்கு பத்து கவான், பைராம், சங்காட்,  கலிடோணிய போன்று தமிழர்கள் வாழும் தோட்டத்து குடியிருப்புதான் வேண்டுமென்பதே நிலைபாடு என்றால்
மாநில அரசிற்கும் வீடமைப்பு நிருவனத்திற்கும் எதிராக வீடற்றவர்களுக்காக நீதிமன்றம் செல்வதைத் தவிர எனக்கு வேறுவழி கிடையாது.

தமிழர்களின் வரலாற்று பதிவான
பினாங்கு நிபோங் திபால்
கலிடோனியா தோட்ட வாழ் தொழிலாளிகளின் உரிமைகளாக
அம்மன் கோவில்,
இந்தியர் இடுகாடு,
மணிமண்டபம்,
விளையாட்டு திடல் உட்பட
தமிழர்களின் வரலாற்றுப் பதிவான  நினைவிடம் ஒன்றை
அழித்தொழிப்பதற்கு முன்னர் அவர்களுக்கான முழு உத்தரவாதங்கள்
வேண்டும், அதுவும் இலவச வீடுகளை பினாங்கு மாநில அரசாங்கம் உறுதிசெய்திட வேண்டும்.

இதுகாரும் பினாங்கு மாநிலத்தில்
தமிழர்களது உரிமைகள் மகிழ்ச்சியடையும்படி பக்காத்தான்
நிலை நிறுத்தியதாக எதுவுமே
கிடையாது,

அதன் நிலைபாடு தொட்டு
பினாங்கு மாநில முதலமைச்சருக்கு  மகஜர் ஒன்றினை சார்வு செய்துள்ளேன், நல்ல பதிலுக்கு காத்திருப்பேன்
அதனுடன் தற்காப்பு போலிஸ் புகாரும் செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Comments