இந்திய மக்கள் நலனை முன்வைத்து ம.இ.கா - தி.மு.க இருவழி உறவு தொடர வேண்டும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வலியுறுத்து

இந்திய மக்கள் நலனை முன்வைத்து ம.இ.கா - தி.மு.க இருவழி உறவு தொடர வேண்டும் 
ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வலியுறுத்து

சென்னை தேசம் செய்தியாளர் வெங்கடேஷ்

சென்னை, ஜூன் 11-
இந்திய மக்கள் நலனை முன்வைத்து ம.இ.கா - தி.மு.க இருவழி உறவு தொடர வேண்டும்
ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த காலத்தைப்  போல ம.இ.கா தமிழகத்துடன் கொண்டிருந்த உறவு வலுப்பெற வேண்டும். இந்த உறவு இந்திய மக்கள் நலனுக்காக தொடர வேண்டும் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களிடம் பேசப்பட்டதாக டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

சென்னையில் கலைஞர் மு.கருணாநிதியின் 96ஆவது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தலைமையில் கலந்து கொண்ட ம.இ.கா பேராளர் குழுவினர் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் அவரது இல்லத்தில் சந்தித்த போது மேற்கண்டவாறு வலியுறுத்தியதாக டத்தோஸ்ரீ எம்.சரவணன் சொன்னார்.

நீண்ட கால அடிப்படையில் ம.இ.காவும் திமுகவும் தங்கள் பங்களிப்பை தொடரும். இந்த இருவழி சந்திப்பின் வழி ம.இ.க - தி.மு.க உறவு வலுப்பெற்றுள்ளது. இந்த இருவழி உறவு மலேசிய இந்திய மக்கள்- தமிழக மக்கள் ஆகிய இருதரப்பினருக்கு நன்மையைக் கொண்டு வரும் என்று நம்புவதாக சரவணன் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் நீண்ட காலமாக தமிழ் தொண்டாற்றி வரும் முன்னாள் தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு ம.இ.கா சார்பில் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் மற்றும் தாமும் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நன்றி தெரிவித்துக் கொண்டதாகவும் சரவணன் சொன்னார்.


சென்னையில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 96ஆவது பிறந்த நாள் விழா திமுக சார்பில் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
இந்த பிறந்தநாள் விழாவில் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன், ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ  எம்.சரவணன், மத்திய செயலவை உறுப்பினர்கள் என்று கலந்து கொண்டனர்.Comments