இந்தியர்களின் வரலாறாக இருந்து மறைந்தவர் துன் வி.தி.சம்பந்தன் ம.இ.கா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் புகழாரம்

இந்தியர்களின் வரலாறாக இருந்து மறைந்தவர் துன் வி.தி.சம்பந்தன்
ம.இ.கா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் புகழாரம்

கோலாலம்பூர்,ஜூன் 15-
மலேசிய இந்தியர்களின் வளர்ச்சியில் ஒரு  வரலாற்று தலைவராக இருந்து மறைந்தவர் துன் வி.தி.சம்பந்தன் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்நாட்டில் துன் வி.தி.சம்பந்தன் இந்தியர்களுக்காக ஆற்றிய சேவை காலத்தால் மறையாதவை. நாடு சுதந்திரம் அடைவதற்காக சிறு வயதிலேயே போராட்டம் நடத்தியவர். இந்நாட்டு தலைவர்களின் துணையோடு மக்களின் சுதந்திரத்திற்காக போராட்டம் நடத்தி இறுதியில் கூட்டாக சுதந்திரம் பெற்றுத் தந்த பெருமை துன் வி.தி.சம்பந்தன் அவர்களையே சாரும் என்றார் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்.

ADVERTISEMENT ADVERTISEMENT

அரசாங்கத்தின் நகர்வுகளால் ஈர்க்கப்பட்டு சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமர்ந்து இந்தியர்களுக்கு பெருமை சேர்ந்தவர். இந்தியர்களின் முன்னேற்றத்தில் ஒரு தூணாக இருந்த சிறந்த அரசியல்வாதி துன் வி.தி.சம்பந்தன்.

அன்றைய காலகட்டத்தில் ஏற்பட்ட தோட்டத் துண்டாடலில் பல்வேறு வேதனைகளுக்கும் சோதனைகளுக்கும் ஆளான துன் வி.தி சம்பந்தன் அப்பிரச்சினைக்கு கூட்டுறவு சங்கத்தின் மூலம் தீர்வு கண்டார். தோட்ட மக்களிடம் பத்து பத்து வெள்ளியாக வசூல் செய்து தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தை நிறுவி தோட்ட மக்களை முதலாளிகளாக்கி தோட்ட மக்களுக்கு விடியலை ஏற்படுத்தியவர் துன் வி.தி.சம்பந்தன்.

தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கம் இன்று ஆல்போல் தழைத்து இந்திய சமுதாயத்தின் பெருமையை தற்காத்துக் கொண்டிருக்கிறது. துன் சம்பந்தன் வாழ்ந்த காலம் குறைவாக இருந்தாலும் சமுதாயத்திற்கு ஆற்றிய சேவை அலப்பரியது. இன்றைய தலைவர்கள் இவரது சேவையை முன்னோடியாக கொள்ள வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் கேட்டுக் கொண்டார்.

ஒரு வரலாற்று தலைவராக திகழும் துன் வி.தி.சம்பந்தன்  ஜூன் 16இல் 100ஆவது அகவையை எட்டுகிறார்.  இவரது பிறந்தநாளை ஆண்டுதோறும் நினைவில் கூற வேண்டியது இந்திய சமுதாயத்தின் கடமையாகும் என்று நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

Comments