அவசரப் பிரிவில் சிகிச்சை பெற்று பூர்வகுடி குழந்தை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி நலம் விசாரித்தார்

அவசரப் பிரிவில் சிகிச்சை பெற்று பூர்வகுடி குழந்தை
அமைச்சர் பொன்.வேதமூர்த்தி நலம் விசாரித்தார்

கோத்தா பாரு,ஜூன்14-
ராஜா பெரம்புவான் ஜைனாப்-2 மருத்துவமனையில் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பூர்வகுடி குழந்தையை பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி நேரில் பார்த்து நலம் விசாரித்தார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

அமைச்சர் நேற்று ஜூன் 13 வியாழக்கிழமை காலையில் மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் பூர்வகுடி மக்களின் நிலைமையைப் பற்றி கேட்டறிந்தார்.

மருத்துவமனை இயக்குநர் டாக்டர் செலசாவதியும் மருத்துவர் நோர் அஸ்னியும் விளக்கம் அளித்தனர். குறிப்பாக, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவன் நஸ்ரி ரோஸ்லியைப் பார்வையிட்டபோது, அந்த மூன்று வயது சிறுவனின் உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்தனர்.

இங்குள்ள மருத்துவக் குழுவினர், அர்ப்பணிப்பு உணர்வுடன் நோயாளிகளை கவனித்து வருவதாகக் குறிப்பிட்ட தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமுர்த்தி, இதே மருத்துவமனையில் உடல் நலம் தேறிவரும் நஸ்ரியின் தந்தை ரோஸ்லியையும் சந்தித்தார்.

சுகாதாரப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள பூர்வகுடி மக்களுக்கு அளிக்கப்ப்டும் சிகிச்சை மனநிறைவு அளிக்கும் வகையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இதன் தொடர்பில் காவல்-துறையின் ஒத்துழைப்பும் குறிப்பிடும்படியாக இருக்கிறதென்றார்.
தொடர்ந்து கிளந்தான் மாநில போலீஸ் படைத் தலைவர் டிசிபி  டத்தோ ஹசானுடீன் ஹசான் மற்றும் எஸ்ஏசி டத்தோ அஸ்மி அபு காசிம் ஆகியோரையும் சந்தித்து கோல கோ கிராமத்தைப் பற்றிய தற்போதைய நிலவரம் பற்றி கேட்டறிந்தார்.

Comments