பாராலிம்பிக் வீரர் சுரேஷ் ‘தேசிய சாதனையாளர்’ அமைச்சர் பொன்.வேதமூர்த்தி பாராட்டு

பாராலிம்பிக் வீரர் சுரேஷ் ‘தேசிய சாதனையாளர்’
அமைச்சர் பொன்.வேதமூர்த்தி பாராட்டு

புத்ராஜெயா, ஜூன் 11-
பன்னாட்டு பாராலிம்பிக் போட்டியில் அம்பு எய்தும் போட்டியில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள வீரர் சுரேஷ் செல்வதம்பிக்கு பாராட்டு தெரிவிப்பதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஹாலந்து நாட்டில் நடைபெறும் பன்னாட்டு பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு, அம்பு எய்தும் பிரிவில் உலக வெற்றியாளராக வாகை சூடிய மலேசியர் என்ற பெருமைக்குரியவராக சுரேஷ் திகழ்கிறார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்குரிய இந்தப் போட்டியில் அமெரிக்க பாராலிம்பிக் வீரர் எரிக் பெனட்டை 7-3 (26-28, 26-26, 27-25, 26-25, 29-27) என்ற புள்ளிகளின்வழி வென்றதுடன்,  2020 டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கான இடத்தையும் இதன்வழி சுரேஷ் உறுதி செய்துள்ளார்.

இதற்கு முன் இத்தாலியில் 2011-இல் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் இதேப் பிரிவில் மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்து கொண்ட சலாம் சீடெக் வெண்கலம் பதக்கத்தை வென்றார். தற்பொழுது, தங்கம் வென்று சாதனை படைத்துள்ள சுரேஷ், சமுதாயத்திற்கும் தேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமைச்சர் செனட்டர் பொன்.வேதமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.

Comments