உலக நாயகன் கமலஹாசன் வரவேற்பில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார் முகேன் ராவ்! மலேசிய கலைத்துறைக்கு பெருமை

உலக நாயகன் கமலஹாசன் வரவேற்பில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார் முகேன் ராவ்!
மலேசிய கலைத்துறைக்கு பெருமை

தேசம் பொன்னமராவதி செய்தியாளர் இரா.பாஸ்கர்

சென்னை, ஜூன் 23-
உலக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் "பிக்பாஸ் சீசன் 3" எனும் பிக்பாஸ் மூன்றாவது தொகுப்பில் மலேசிய கலைஞர் முகேன் ராவ்
உலக நாயகன் கமலஹாசன் வரவேற்பில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.மலேசிய கலைத்துறைக்கு பெருமை சேர்த்துள்ள முகேன் ராவ், சனிக்கிழமை தொடங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்வில் உலக நாயகன் கமலஹாசன் மேடையில் வரவேற்க, அவரிடம் உரையாடி வாழ்த்துடன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதாக தேசம் வலைத்தள செய்தியாளரிடம் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT ADVERTISEMENT

பிக்பாஸ் மேடைக்கு பலத்த கரவொலியில், மகிழ்ச்சி வெள்ளத்தில் சென்ற முகேன் ராவ், கமலஹாசன் கேட்ட கேள்விகளுக்கு சிரித்த முகத்துடன் பதிலளித்தார். அதன்பிறகு பிக்பாஸ் வீட்டிற்குள் பல கனவுகளுடன் சென்றார் முகேன் ராவ்.

இந்த பிக்பாஸ் சீசன் 3 இன்று ஜூன் 23 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.00 மணி  தொடங்கி விஜய் டிவியில் ஒளியேறவிருக்கிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மலேசிய கலைத்துறைக்கு பெருமை சேர்ந்துள்ள முகேன் ராவ், பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் தங்கி வெற்றி மகுடத்தை சூட வாழ்த்துவோம்.

மலேசிய கலைத்துறையில் ஒரு பாடகராக வலம் வந்து கொண்டிருக்கும் முகேன் ராம் ராவ் ஆஸ்ட்ரோவில் கே.எல் டூ காரைக்குடி நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்தார். அறிவிப்பு செய்யும் திறன்கொண்ட முகேன் ராவ் பல சொந்த பாடல்களை பாடியிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரது பங்கேற்பு சினிமா துறைக்கு வித்திடும் என்று எதிர்பார்க்கலாம். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments