ஆஸ்ட்ரோவில் இருந்து டாக்டர் ராஜாமணி பதவி விலகுவதற்கு நெருக்குதல் காரணமா?

ஆஸ்ட்ரோவில் இருந்து டாக்டர் ராஜாமணி பதவி விலகுவதற்கு நெருக்குதல் காரணமா?

குணாளன் மணியம்

கோலாலம்பூர்,ஜூன் 21-
ஆஸ்ட்ரோவில் இருந்து நெருக்குதல் காரணமாக டாக்டர் ராஜாமணி  பதவி விலகுவதாக தகவல் கசிந்துள்ளது.

ADVERTISEMENT ADVERTISEMENT

ஆஸ்ட்ரோ தமிழ்ப் பிரிவில் 22 ஆண்டுகள் பணியாற்றி வந்த டாக்டர் ராஜாமணி பதவி விலக வேண்டும் என்று  ஏற்கெனவே பல பொது இயக்கங்கள், கலைஞர் அமைப்புகள், மலேசிய கலைஞர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் டாக்டர் ராஜாமணி பதவி விலகுவது நெருக்குதல் காரணமாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

கடந்த 1996இல் ஆஸ்ட்ரோ  தொடங்கப்பட்டபோது அதன் தமிழ்ப் பிரிவுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட  டாக்டர் ராஜாமணி செல்லமுத்து வானவில் அலைவரிசையில் ஆரம்பித்து 22 ஆண்டுகளில் 17 அலைவரிசைகளை தொடங்கியவர்.

மலேசிய இந்திய சமுதாயத்தின் பல எதிர்ப்புகளை சந்தித்த டாக்டர் ராஜாமணி நாளை ஜூன் 21-ஆம் தேதியோடு தனது அஸ்ட்ரோ பொறுப்புகளில் இருந்து விலகுவதாக செய்திகள் வெளியாகின. டாக்டர் ராஜாமணி நெருக்குதல் காரணமாகவே பதவி விலகுவதாக தகவல் கசிந்துள்ளது.

டாக்டர் ராஜாமணிக்குப் பிறகு அஸ்ட்ரோ பொறுப்புகளில் யார் நியமிக்கப்படுவார் என்று அஸ்ட்ரோவை தொடர்பு கொண்டு கேட்ட போது, டாக்டர் ராஜாமணி பதவி விலகலை உறுதிபடுத்திய அஸ்ட்ரோ புதிய தலைவர் இன்னும் முடிவாகவில்லை என்று தேசம் வலைத்தளத்திடம் தெரிவித்தது.

Comments