தேசம் ஊடக சாதனையாளர்கள் விருது விழா கலைஞர் முகேன் ராவுக்கு சாதனையாளர் விருது தேசம் குணாளன் மணியம் அறிவிப்பு

தேசம் ஊடக சாதனையாளர்கள் விருது விழா
கலைஞர் முகேன் ராவுக்கு சாதனையாளர் விருது
தேசம் குணாளன் மணியம் அறிவிப்பு

மித்ரன்

கோலாலம்பூர்,ஜூன் 23-
தேசம் ஊடக சாதனையாளர்கள் விருது விழாவில் பிரபல மலேசிய கலைஞர் முகேன் ராவுக்கு சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படவிருப்பதாக தேசம் ஊடகத்தின் தோற்றுநர் குணாளன் மணியம் அறிவித்துள்ளார்.

மலேசிய இசைத்துறையில் ஒரு பாடகராக வலம் வந்து கொண்டிருக்கும் முகேன் ராவ் தனக்குள் இருக்கும் பல திறமைகளை வெளிக்கொணர்ந்துள்ளார். நடிப்பு, இயக்கம், அறிவிப்பு, பாடலாசிரியர் என்று பன்முகக் கலைஞராக வலம் வந்து கொண்டிருக்கும் முகேன் ராவ் பல மியூசிக் வீடியோவில் நடித்தும் பாடியும் இருக்கிறார்.

ADVERTISEMENT ADVERTISEMENT

மலாய் படங்கள், தமிழ்ப்படங்கள், விளம்பர படங்கள் என்று பலவற்றில் தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவரது பன்முகத் திறனுக்காக தேசம் ஊடக சாதனையாளர்கள் விருது விழா நிகழ்வில் முகேன் ராவுக்கு சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படும். எனினும் முகேன் ராவுக்கு என்ன விருது வழங்கப்படும் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக குணாளன் மணியம் தெரிவித்தார்.

தேசம் ஊடக சாதனையாளர்கள் விருது விழா இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2018, 2019 ஆகிய இரண்டு ஆண்டுகளில் பலதுறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு இந்த அங்கீகார விருது வழங்கப்படுவதாக குணாளன் மணியம் சொன்னார்.

அந்த வகையில் மலேசிய கலைத்துறையில் ஒரு கலைஞராக பலதுறைகளில் சாதனை படைத்து வரும் முகேன் ராவுக்கு தேசம் ஊடக சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. மலேசிய கலைத்துறையில் ஒரு பாடகராக வலம் வந்து கொண்டிருக்கும் முகேன் ராவ் ஆஸ்ட்ரோவில் கே.எல் டூ கேகே நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வந்தார்.

மலேசிய கலைத்துறையில் ஒரு சாதனையாளராக வலம் வந்து கொண்டிருக்கும் முகேன் ராவ் "பிக்பாஸ் சீசன் 3" நிகழ்ச்சியில் இணையும் இந்த பொருத்தமான நேரத்தில் தேசம் ஊடகத்தின் சார்பில் "சாதனையாளர்" வழங்கப்படுவதாக குணாளன் மணியம் குறிப்பிட்டார்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுப்பில் உலக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் "பிக்பாஸ் சீசன் 3" தொகுப்பில் மலேசிய கலைஞராக முகேன் ராவ் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தவிருது.

Comments