அன்பு – பரஸ்பரம் – ஒற்றுமை – பிறர் நலம் பேணல் கொள்கைகளோடு நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவோம்! டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் நோன்புப் பெருநாள் வாழ்த்து

அன்பு – பரஸ்பரம் – ஒற்றுமை – பிறர் நலம் பேணல் 
கொள்கைகளோடு நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவோம்!
டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் நோன்புப் பெருநாள் வாழ்த்து

கோலாலம்பூர், ஜுன்,4-ஒரு மாத காலம் இறைவனுக்கு வாக்களித்த கடமைதனை நிறைவேற்றி, பின்னர் மனநிறைவுடன் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும், இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும்  தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் தமது மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

உலக மக்கள் உய்ய உணவு மிகவும் முக்கியமானதாகும். உணவின்றி உலகில்லை. உணவின்றி பசித்திருப்பவர்களின் உணர்வுகளை அறிந்து, ஏழை மக்களின் துயரங்களை உணர்ந்து, இந்த ஒரு மாத கால ரம்லான் மாதத்தில் நோன்புப் பின்பற்றப்படுகிறது.

பொறுமை, மனித நேயம், துன்பம் போன்றவற்றினை பொறுமையோடு காத்து, உயர்வான சிந்தனைகளை மனத்திற்குள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இன்றைய நாளின் பொருளாகும். அந்த வகையில், இஸ்லாமியர்களின் நோக்கங்களை உள்வாங்கிக் கொண்டு, பல்லினங்கள் வாழும் இந்நாட்டில் இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவும்,         சகோதரத்துவத்துடனும் வாழும் பண்புகளை உருவாக்கிக் கொள்ள  வேண்டும்.

அந்த வகையில், நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய அன்பர்கள் அனைவரும் இறைவழி நடந்து, இறை ஒளியை நாடி தங்களது உற்றார், உறவினருடன் கலந்து உறவாடி, புத்தாடைகள் உடுத்தி மகிழ்ச்சியுடன் இப்பெருநாளை கொண்டாட வேண்டுமென்று, நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன்  நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

Comments