பாரா விளையாட்டு வீரர் சுரேஷ் பொன்.வேதமூர்த்தி சார்பில் சிறப்பிக்கப்பட்டார்

பாரா விளையாட்டு வீரர் சுரேஷ் 
பொன்.வேதமூர்த்தி சார்பில் சிறப்பிக்கப்பட்டார்

புத்ராஜெயா,ஜூன் 20-
பன்னாட்டு பாரா விளையாட்டுப் போட்டி, அம்பு எய்தும் பிரிவில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர் சுரேஷ் செல்வதம்பி, பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி சார்பிலும் ஹிண்ட்ராஃப் சார்பிலும் சிறப்பு செய்யப்பட்டார்.


ADVERTISEMENT ADVERTISEMENT
அண்மையில் ஹோலந்து நாட்டில் நடைபெற்ற பன்னாட்டு பாராலிம்பிக் போட்டில் கலந்து கொண்டு, அம்பு எய்தும் பிரிவில் உலக வெற்றியாளராக முத்திரைப் பதித்த சுரேஷை சமூக நல அமைச்சர் பொன்.வேதமூர்த்தியின் சிறப்பு அதிகாரி விவேக் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.

கெடா, கோல கெட்டிலில் உள்ள சுரேஷின் இல்லத்திற்கு விவேக் சென்றபொழுது, கெடா மாநில ஹிண்ட்ராஃப் பொறுப்பாளர்களும் உடன் சென்றனர். அனைவரும் சுரேஷின் தாயார் திருமதி ச.தேவயானியையும் பாராட்டி மகிழ்ந்தனர்.

Comments