செபராங் ஜெயாவில் தமிழ் இளைஞனின் நவீன முடி திருத்தும் நிலையம் திறப்பு

செபராங் ஜெயாவில் தமிழ்  இளைஞனின்
நவீன முடி திருத்தும் நிலையம்  திறப்பு


பட்டர்வொர்த், ஜூன் 7.
தமிழ் இளைஞர் முகமட் நாஷார் சையிட் முகமட் நவீன முடி திருத்தும் நிலையம் ஒன்றை செபராங் ஜெயா, பில்லியன் சூப்பர் மார்க்கெட்டிற்கு எதிரில் திறந்துள்ளார்.

பாரம்பரியமாக தமிழர்கள் இந்நாட்டில் நடத்தும் முடி திருத்தும் நிலையங்களில் இருந்து சற்று மாறுபட்டு,  முடி
திருத்துவதோடு , முடி பராமரிப்பு, முக பராமரிப்பு ஆகிய நவீன சேவைகள் கொண்ட முடிதிருத்தும் நிலையமாக செயல்பட்டு வருகின்றது.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இத்தகைய சேவைகளுக்கு தமது முடித்தும்  நிலையங்களில் உலகின் மிகச்சிறந்த  முதல் பத்து தரமிக்க திரவியங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருவதாக  முகமட் நாஷார் கூறினார்.

முடி பராமரிப்பு, முக பராமரிப்பு சேவைகளை தமது நிலையத்தை சேர்ந்த பெண்கள் மேற்கொள்வார்கள் என அவர் தெரிவித்தார்.

மேலும், இங்கு காப்பி, தேநீர் மற்றும் குளிர் சுவை பானங்கள் வழங்கப்படும். பில்லியர்ட் விளையாட்டு வசதிகளும் இங்கு உள்ளது என கூறினார்.

ஒரு சூப்பர் மோட்டார் சைக்கிள் பிரியரான அவர் இந்தியாவில் தயாரிக்கப்படும்
ராயல் என்பீல்டு ரக மோட்டார் சைக்கிளை கொண்ட  நண்பர்கள் வட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த நிலையம் ஒரு ஓய்வு மையமாகவும் அமையும் என்றார்.

முடி திருத்துவதற்கு இங்கு கட்டணமாக ரிங்கிட் மலேசியா 59 செலுத்த வேண்டும்.
கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் இது போன்று மேலும் நான்கு கடைகளும், வட மலேசிய பகுதியில் மேலும் இரண்டு கடைகளை திறக்க தாம் திட்டமிட்டுள்ளதாக முகமட் நாஷார் கூறினார்.

இந்த முடிதிருத்தும் நிலைய திறப்பு விழாவின் போது கோலாலம்பூரிலிருந்து ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிளோட்டிகள் குழுவினர் சிறப்பு வருகை தந்து
கலந்து சிறப்பித்தனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Comments