ஒரே பள்ளிமுறை திட்டத்தை அரசாங்கம் அறிவித்தால் அதனை எதிர்த்து குரல் கொடுப்போம்! மலேசிய தமிழர் நல நற்பணி மன்றம் எச்சரிக்கை

ஒரே பள்ளிமுறை திட்டத்தை  அரசாங்கம் அறிவித்தால் அதனை எதிர்த்து குரல் கொடுப்போம்!
மலேசிய தமிழர் நல நற்பணி மன்றம் எச்சரிக்கை

மு.வ.கலைமணி

பினாங்கு, ஜூன் 7-
நாட்டின் எத்தரப்பினரானாலும் தமிழர்களின் வாழ்வாதார உரிமையில் கைவைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று  மலேசிய தமிழர் நல நற்பணி மன்றத் தலைவர் மு.வீ.மதியழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT


தமிழ் மொழிக் கல்வி என்பது
மலேசிய திருநாட்டில் தனித் தன்மையுடன் சமசீர் கல்வியாக வரலாற்று பதிவைக் கொண்டு பீடுநடை போட்டு வருகிறது,

அம்மொழிக் கல்வியை  ஆளும் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் மாற்றியமைத்து தமிழ்க் கல்வியை அழித்தொழித்திட நினைத்தால்
அது தமிழர்களின் உரிமையில் கை வைப்பதாகும் என  மு.வீ.மதியழகன் கூறினார்.

ஒரே பள்ளிமுறை திட்டங்களை அரசாங்கம் தமிழரிடத்திலும்,
தமிழ் ழொழிக் கல்வியிலும் கால்பதித்து சீர்கெடுக்க நினைத்தால் வரவுகள் என்பது அரசாங்கத்திற்கு பேரிழப்பாக தான்
போய் முடியும்,

தமிழர்கள் அதனையும்,
அக்கல்வி கொள்கையையும்
மிக கடுமையாக எதிர்த்து நிற்போம் தேவையற்ற ஒரேமுறை கல்விக் கொள்கை.

இதனால் தமிழர்கள் கொதிப்படைவர் என்பதோடு அரசாங்கம் மலேசிய தமிழர்களின் உணர்வுகளை மதிக்காது
உதாசீனம் படுத்துவதே இந்த ஒரேமுறை கல்வி கொள்கை,

இதுகாரும் தமிழ்மொழிக் கல்விக்கு மிகப்பெரிய அரணாக நின்று,
துணை புரிந்த அரசாங்கம் தேசிய முன்னணி அரசாங்கம், அதன் தலைவரான
டத்தோஸ்ரீ நஜீப்புமாகும் அன்று எதிர்க்கொள்ளாத சங்கடங்களை இன்றைய ஆட்சியில் காணும்போது
கவலை தருகிறது.

ஒரு நூற்றாண்டு காலவரலாற்று பதிவைக் கொண்ட தேசியவகை தமிப்பள்ளிகள், முடிந்த 60-ஆண்டுகளில் எந்தவொரு சிக்கலையும் எதிர்க்கொள்ளாத தமிழ்மொழிக் கல்வி
இன்று நம்பிக்கை கூட்டணியால் காயம்பட்டுபோகும் நிலை தமிழர் மனங்களை ரணகனமாக்கியுள்ளது,

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இன்று மனிதரை கடிக்கும் நிலையாக மக்கள் கூட்டணியான ஆளும் அரசாங்கம் தமிழையும் தமிழர்களையும் ஒழித்திட  கையாளும் சூழ்ச்சியாகவே எண்ணிட தோன்றுகிறது,

ஆளும் கட்சியினர் இத்திட்டத்தை ஆதரித்தாளும் எதிர்கட்சியான நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என கல்வி அமைச்சையும்
ஆளும் நம்பிக்கை கூட்டணி தலைமையையும்
இந்திய  தலைவர்களையும் எச்சரிக்கின்றோம் என
முவீ.மதியழகன் தெரிவித்தார்.

Comments