"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" "களம்" அமர்களம்! அதிருகிறது "பரம்பதம்" குணாளன் மணியம்

"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்"
"களம்" அமர்களம்!  அதிருகிறது "பரம்பதம்"

குணாளன் மணியம்

கோலாலம்பூர்,ஜூன் 29-
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோர் பதம் என்பார்கள். அந்த வகையில் "களம்" அமர்களம்."பரம்பதம்" திரைப்படத்தை அதிரவைக்கிறது "களம்" டீசர்.

சாய் நந்தினி மூவி வேல்டு சார்பில் டாக்டர் லட்சப்பிரபு ராஜகோபால் தயாரிப்பில் தனேஷ் பிரபு முதன்மை இயக்கத்தில் விக்னேஷ் பிரபு இணை இயக்கத்தில் இவ்வாண்டு டிசம்பர் மாதம்  வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் "பரம்பதம்" திரைப்படத்தின்  இரண்டாவது டீசர் "களம்" கடந்த ஜூன் 22இல் பினாசில்
வெளியீடு காண்டது.

ADVERTISEMENT ADVERTISEMENT

மலேசியாவின் முதல் கேம்போர்ட் திரைப்படமான "பரம்பதம்" எப்படி இருக்கப் போகிறது என்பதை "களம்" டீசர் எடுத்துக் காட்டியுள்ளது. "களம்" டீசர் காட்சிக்கு காட்சி மர்மம், திகில் நிறைந்ததாக  காணப்படுகிறது.

யாரும் போகாத இடத்திற்குள் கமிரா வழி புகுந்துள்ளது "பரம்பதம்". அதன் பிரமாண்ட காட்சிகள் "களம்" டீசரில் களம் கண்டுள்ளது. மக்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை "களம்" இரண்டாவது டீசர் ஏற்படுத்தியுள்ளது.

இந்த "பரம்பதம்" திரைப்படத்தின் முதல் டீசரான பகடையில்  அதிரடி காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் களம் கண்டுள்ள "களம்" டீசர்  மிகவும் பரபரப்பாக வெளியீடு கண்டது.

மலேசிய திரைப்பட வரலாற்றில் ஒரு மாறுபட்ட படைப்பாக மலர்ந்துள்ள "பரம்பதம்" திரைப்படத்தின்   "களம்" டீசர் ஒரு குறிஞ்சி மலர். போகாத இடங்களுக்கு "பரம்பதம்" கால் பதித்துள்ளது.

மர்ம வீடு, மர்ம வீட்டில் அதிரடி காட்சிகள், மர்ம குகை, அதன் மர்மங்கள், கேம் போர்ட் மர்மங்கள் என பல்வேறு மர்மங்களை "பரம்பதம்" பூட்டி வைத்துள்ளதை "களம்" காட்டுகிறது. "பரம்பதம்" மக்களை அதிரவைக்கும் என்று தாராளமாக எதிர்பார்க்கலாம்.

இந்த "களம்"  டீசர் மக்கள் மனதில் ஆழப்பதிந்து களம் கண்டுள்ளது. மொத்தத்தில் ரசிகர்களை ஆட்டிப் படைக்க வருகிறான் "பரம்பதம்".

மலேசியாவின் முதல் கேம்போர்ட் திரைப்படம் என்ற பெருமையுடன் "பரம்பதம்" களம் கண்டு வருகிறது என்றால் அது மிகையில்லை. "களம்" அமர்களம்!

தேசத்தின் பாராட்டுகள்.

Comments