அடையாள அட்டை, சொக்சோ, சேமநிதி, தொழிலாளர் பிரச்சினைகளை நேரில் கண்டறிகிறார் மக்கள் சந்திப்பில் மனிதவள அமைச்சர் குலசேகரன்

அடையாள அட்டை, சொக்சோ, சேமநிதி, தொழிலாளர் பிரச்சினைகளை நேரில் கண்டறிகிறார்
மக்கள் சந்திப்பில் மனிதவள அமைச்சர் குலசேகரன்

குணாளன் மணியம்

புத்ராஜெயா, ஜூன் 20-
அடையாள அட்டை, சொக்சோ, சேமநிதி, தொழிலாளர் பிரச்சினை என்று பல பிரச்சினைகளை நேரில் கண்டறிந்து தீர்வு காணும் மனிதவள அமைச்சர் குலசேகரன் முயற்சியை மக்கள் பாராட்டியுள்ளனர்.

ADVERTISEMENT ADVERTISEMENT


புத்ராஜெயாவில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு நடைபெறும் இந்த மக்கள் சந்திப்பில் மனிதவள அமைச்சர் குலசேகரன் தம்மை நாடி வரும் மக்களை நேரில் சந்தித்து பிரச்சினைகளை கண்டறிந்து வருகிறார்.


நாட்டில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் ஆட்சி அமைத்து ஓராண்டு காலம் பூர்த்தியடைந்த நிலையில் மக்களை நேரில் சந்திக்கும் முதல் அமைச்சராக மனிதவள அமைச்சர் திகழ்கிறார்.

மக்கள் பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு காண வேண்டும்; இதனை எப்படி செய்வது என்று சிந்தித்த போது மக்களை நேரில் சந்தித்து தீர்வு காண வேண்டும் என்ற முடிவிற்கு வந்ததாக தேசம் வலைத்தளத்திடம் மனிதவள அமைச்சர் குலசேகரன் தெரிவித்தார்.

மனிதவள அமைச்சு சார்ந்த விவகாரங்களை மட்டும் கவனிப்போம் என்று முதலில் தீர்மானித்தோம். ஆனால், அடையாள அட்டை, பிறப்புப் பத்திரம் ஆகிய பிரச்சினைகளுடன் மக்கள் வரத்தொடங்கியதால் டிரா மலேசியா சரவணன் தலைமையில் ஒரு முகப்பிடத்தை கொண்டு வந்தோம். இதுவரை பல அடையாள அட்டை, பிறப்பு பத்திரம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக குலசேகரன் சொன்னார்.

மனிதவள அமைச்சின் கீழ்தளத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் காலை 8.00 மணிக்கு இந்த மக்கள் சந்திப்பு தொடங்குகிறது. மக்கள் சந்திப்பில் மனிதவள அமைச்சின் பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மக்களை நேரில் சந்தித்து பிரச்சினைகளை கண்டறிகின்றனர்.

மனிதவள அமைச்சின் இயக்குநர் உட்பட அமைச்சின் அதிகாரிகள் இந்த நேரடி சந்திப்பில் பங்கேற்கின்றனர். அடையாள அட்டை பிறப்பு பத்திரம் பிரச்சினையை பொருத்தமட்டில் டிரா மலேசியா சரவணன் முயற்சியில் பலருக்கு அடையாள அட்டை, பிறப்பு பெற்றுத்தரப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாக பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை இல்லாமல் இருந்து வந்த கெடாவைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ்வரனுக்கு டிரா மலேசியா மூலம் அடையாள அட்டை பெற்றுத் தரப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக கெடாவில் தன் பாட்டியின் வளர்ப்பில் ஆறாம் வகுப்பு வரை படித்தும் யூபிஎஸ்ஆர் தேர்வு எழுத முடியாமல் போனது. அதன்பிறகு அந்நிய தொழிலாளி போல் வேலை செய்து வந்த விக்னேஷ்வரன், அந்நிய தொழிலாளருக்கான மருத்துவ கட்டணத்தை செலுத்தினார் என்பது கொடுமையிலும் கொடுமை.


 டிரா மலேசியா மூலம் விக்னேஷ்வரனுக்கு அடையாள அட்டை பெற்றுத் தரப்பட்டுள்ளது.

இதைப்போலவே 31 ஆண்டுகளாக பிறப்பு பத்திரம், அடையாள அட்டை இல்லாமல் திருமணம் செய்து கொண்டு இரண்டு பிள்ளைகளுக்கும் பிறப்பு பத்திரம், அடையாள அட்டை இல்லாமல் தவித்து வந்த கிள்ளான், செந்தோசாவை சேர்ந்த எலிஸ் ஜெயகுமார் என்பவருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் டிரா மலேசியா சரவணன் பிறப்பு பத்திரம், அடையாள அட்டையைப் பெற்றுத் தந்துள்ளார்.


மக்கள் பிரச்சினைகளை நேரில் கண்டறிந்து தீர்வு காணும் நடவடிக்கையில் இறங்கியுள்ள மனிதவள அமைச்சர் மாண்புமிகு குலசேகரன் அவர்களை பாராட்டுவோம்.

Comments