பொன்.வேதமூர்த்தி தலைமையில் எஸ்டிபிஎம் சிறந்த மாணவி திவ்யாவிற்கு சிறப்பு

பொன்.வேதமூர்த்தி தலைமையில்
எஸ்டிபிஎம் சிறந்த மாணவி திவ்யாவிற்கு சிறப்பு

புத்ரா ஜெயா, ஜூன்,20-மலேசிய உயர்க் கல்விச் சான்றிதழ் என்னும் எஸ்டிபிஎம் கல்வி, 2018-ஆம் ஆண்டு தேர்வில் நாட்டிலேயே சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற மாணவி திவ்யா ஜனனி மாரியப்பனுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி, ஜூன் 21 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி அளவில் நடைபெற இருக்கிறது.

ADVERTISEMENT ADVERTISEMENT

கிளந்தான், தன மேரா, கெரில்லாத் தோட்டத்தில் உள்ள சமூக மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில்  சிறப்பு வருகையாளராக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கலந்து கொண்டு மாணவிக்கும் மாணவியின் பெற்றோர் கோ.மாரியப்பன்-ம.முனியம்மாள் இணையருக்கும் சிறப்பு செய்ய இருக்கிறார்.

கணக்கியல் துறையில் உயர்க்கல்வியைத் தொடர திட்டமிட்டிருக்கும் ஜனனி, தற்பொழுது தோட்டப் பணிமனையில்  பகுதிநேரமாக பணி புரிகிறார். இவரின் அண்ணன் ஸ்ரீவிஸ்வாதரன் ஒரு தனியார் நிறுவனத்தில் கிடங்கு பராமரிப்பாளராக தொழில் செய்கிறார்.

சுற்று வட்டார பொதுமக்களும் வட்டார அரசு சாரா அமைப்பினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவி திவ்யா ஜனனியைப் பாராட்டவிருக்கின்றனர்.இந்த நிகழ்ச்சி தொடர்பான மேல் விவரத்திற்கு 012-4292817 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Comments