மின்னலின் காலைக் கதிரில் தந்தையர் தின கொண்டாட்டம்!

மின்னலின் காலைக் கதிரில் தந்தையர் தின கொண்டாட்டம்!

கோலாலம்பூர்,ஜூன் 16- தந்தையர் தினத்தை முன்னிட்டு மின்னலில் பல சிறப்பு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அந்த வகையில் இன்றைய மின்னலின் காலைக் காதிரில் காலை மணி 8.15க்கு சிறப்பு நேர்காணல் இடம் பெற்றன. இதில் சதிஷ் ராவ், நவநீதா இருவரும் தங்கள் அப்பாவுடன் கலந்து கொண்டனர்.

தங்கள் வெற்றிக்கு காரணமாக விளங்கிய தந்தையின் அர்பணிப்பு, தியாகங்கள் போன்றவற்றை உருக்கமாக பகிர்ந்துக் கொண்டனர்.
தோட்ட வேலை செய்து குடும்பத்திற்காக பல தியாகங்களை செய்த அப்பாவின் தியாகங்களை சதிஷ் மிக உருக்கமாக பகிர்ந்துக் கொண்டார்.

ADVERTISEMENT ADVERTISEMENT

அது மட்டும்மல்லாமல், நவநீதா ஓய்வு பெற்ற தலைமையாசிரியரின் மகளாக இருந்து இன்றைக்கு வழக்கறிஞ்ஞராக பணி புரிவதற்கு அப்பாவின் ஊக்கமும் உற்சாக வார்த்தைகளுமே முதன்மையான காரணம் என்று ஆணிதரமாக கூறினார்.


இந்த சந்திப்பை மிகவும் கலகலவெனு சிறப்பாக வழி நடத்தினார் அறிவிப்பாளர் சத்யா.  இன்றும் என்றும் தன் குடும்பத்திற்காக வாழும் அனைத்து அப்பாக்களுக்கும் மின்னலின் தந்தையர் தின வாழ்த்துகள்!

Comments