நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படை தேசிய ஒருமைப்பாடு கிளந்தான் தாய் மக்கள் முழக்கம்

நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படை தேசிய ஒருமைப்பாடு
கிளந்தான் தாய் மக்கள்  முழக்கம்

தும்பாட், ஜூன்22-
நாடு இன்னும் முன்னேற வேண்டுமெனில் மலேசிய மக்களிடையே ஒருமைப்பாட்டு உணர்வு இன்னும் வலுப்பெற வேண்டும் என்று  கிளந்தான்வாழ் தாய் மக்கள் முழக்கம் செய்தனர்.

ADVERTISEMENT ADVERTISEMENT

தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தியுடன் கிளந்தான் தாய் மக்கள் ஒன்றுகூடலுக்கான நிகழ்ச்சியை கிளந்தான் தாய் மக்கள் அமைப்பின் தலைவர் பேராசிரியர் பிம் தும்பாட்,  தெர்பாக் கிராமத்தில் உள்ள பௌத்த கூடத்தில் ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் அமைச்சரைப் பிரதிநிதித்த கிளந்தான் மாநில ஒற்றுமைத் துறை தலைமை இயக்குனர் திருமதி நோர்வாஹிடா கலந்து கொண்ட வேளையில், அமைச்சர் பொன். வேதமூர்த்தியின் அலுவலகத்தில் இருந்து சிறப்பு அதிகாரி சே.இராஜமோகன், கெடா மாநில அதிகாரி அ.விவேகானந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இனம், மொழி, சமயம் கடந்து அனைத்து மக்களும்  ஒன்றுபட்டு வாழ்ந்தால் நாம் இன்னும் சாதிக்கலாம் என்று நோர்வாகிடா ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

மலேசிய தாய் சமூகத்தின் சார்பில் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருக்கும் அக்னான் ஏத்தூக்கும் கலந்து கொண்ட இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் ஏறக்குறைய 300 பேர் கலந்து கொண்டதுடன் ஒருமைப்பாட்டு ஸ்லோகத்தை முழங்கினர்.

நிறைவாக, கிளந்தான் தாய் சமூக மக்களின் சார்பில் ஓர் அரசப் பிரதிநிதி நியமிக்கப்பட வேண்டும்; அடையாள ஆவணச் சிக்கலுக்கு தீர்வு காணப்பட  வேண்டும் என்ற கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவைச் சமர்ப்பித்தனர்.

நிறைவில், இதுவரை எந்த அமைச்சரும் ஒற்றுமைத் துறையில் இருந்து எங்களை சந்திக்க வந்ததில்லை. அப்படி இருந்தும்  அதுவும் எங்கள் தும்பாட் பகுதியைச் சேர்ந்த அமைச்சர் பொன்.வேதமூர்த்தியை சந்திக்க முடியாமல் போய்விட்டது என்று வட்டார தாய் மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.

Comments