பினாங்கு இந்து இயக்கம் துணை நிற்கும்! தலைவர் பி.முருகையா உறுதி

பினாங்கு இந்து இயக்கம் துணை நிற்கும்!
தலைவர்
பி.முருகையா உறுதி

ஜோர்ஜ்டவுன், ஜுன் 2-
பினாங்கு இந்தியர்களின் நிலையை மேம்படுத்த மாநில அரசு மேற்கொள்ளும் பல  நடவடிக்கைகளுக்கு பினாங்கு இந்து இயக்கம் துணை நிற்கும் என அவ்வியக்கத்தின்  தலைவர் பி.முருகையா உறுதியளித்தார்.

எல்லா நிலையிலும் இந்தியர்களின் நிலை மேம்பட வேண்டும் என்றும் இதற்கான மாநில அரசின் முயற்சிகளுக்கு தோள் கொடுக்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

கடந்த  மே 30ஆம் தேதி பினாங்கு முதலமைச்சர் மாண்புமிகு  சாவ் கோன் யாவ் உடன் பினாங்கு இந்து இயக்கத்தினர் மரியாதை நிமித்தமாக  சந்தித்த போது இந்த வாக்குறுதியை அவர் வழங்கினார்.

இந்த சந்திப்பின் போது மாநிலத்தில்
இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து முதலமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அவற்றுள் முக்கியமானதாக மாநில அரசின் நிர்வாக தலைமையகமாக செயல்படும் கொம்தார் கட்டடத்தில் மக்களின் அனைத்து பிரச்சினைகளையும், குறைகளையும் கேட்கும் ஒரு மையத்தை அமைக்க வேண்டுமென ஆலோசனை முன் வைக்கப்பட்டது.

மேலும், இந்தியர்களுகாக ஒரு முதியோர் இல்லம் அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்தியர்கள் அதிகம் வாழும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் மக்கள் பிரதிநிதிகள் சேவை மையத்தில் தமிழ் பேசும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பதும்,
மாநில அரசு ஏற்கெனவே ஒப்புக்கொண்டதைப் போல் பினாங்கில் ஒரு தமிழ் இடைநிலைப் பள்ளியை நிறுவுவது,

மாநில சுற்றுலாத்துறை மற்றும் பாரம்பரியத்துறை அலுவலகங்களில் இந்திய அதிகாரிகளை நியமிப்பது என பல்வேறு பிரச்சினைகள் குறித்து முதலமைச்சரிடம் கலந்தாலோசிக்கப்பட்டது.

பினாங்கு இந்து இயக்கம் ஒரு தன்னார்வ அமைப்பு என்பதாலும், மேலும் இயக்கம் மேற்கொள்ளும் மருத்துவ மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் எனவும், இதனால் இந்திய சமுதாயத்திற்கு தாங்கள் மேலும் நற்சேவைகள் செய்ய இயலும் எனவும் அவர் எடுத்துரைத்ததாக கூறினார்.

தனது இயக்கத்தின் தன்னார்வ செயல்பாட்டினால் பல ஆயிரம்  இந்திய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

அந்த வகையில் இலவச மருத்துவ சேவையும்  கல்விப் பணியும் ஆகும். இப்பணிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுமேயானால்  மேலும் பல ஆயிரம் மக்களுக்கு தொடர்ந்து எங்கள் சேவையை வழங்க முடியும் என அவர் தெரிவித்தார்.

Comments