பொருளாதாரம் மேம்பாடடைய வேண்டும்! மிம்காய்ன் தலைவர் டத்தோ ஜமருல்கான் ரமலான் வாழ்த்து

பொருளாதாரம் மேம்பாடடைய வேண்டும்! 
மிம்காய்ன் தலைவர் டத்தோ ஜமருல்கான் 
ரமலான் வாழ்த்து

கோலாலம்பூர், ஜுன், 5-பசித்திருந்து, விழித்திருந்து, தனித்திருந்து மாதம் முழுவதும் இறைவனின் கட்டளைப்படி நோன்பிருந்து இன்று ஈகைப் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

சிறிது காலமாக நமது வியாபார நடவடிக்கைகள் தொய்வை அடைந்துள்ளன.  குறிப்பாக அந்நியத் தொழிலாளர்களை நம்பி இருக்கும் தொழில் துறைகள் உரிய நேரத்தில் ஆட்களுக்கான அனுமதி கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். பதிலி வேலையாள் பிரச்சினைகளும் தீர்க்க வேண்டியுள்ளது. புதிய அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எடுத்து தொழில்கள் சிறப்பாக நடைபெற துணைபுரிய வேண்டும் என்று இந்த நல்ல நாளில் கேட்டுக் கொள்கிறேன்.

இறைவனின் அருளால் நமது தொழில்கள் சிறக்கவும் வளங்கள் பெருகவும் அமைதியும் சுபிட்சமும் நம் நாட்டில் என்றென்றும் தழைக்கவும் நோன்புப் பெருநாளில் அல்லாஹ்விடம் வேண்டிக் கொள்கிறேன்.

பெருநாள் கொண்டாடும் அனைவருக்கும் மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக சம்மேளனமான மிம்காய்ன் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக மிம்காய்ன் தலைவர் டத்தோ ஜமருல் கான் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Comments