டெம்பல் ஆப் ஃபைன் ஆர்ட்சில் "சூர்ப்பனகை" நாடகம் ஜூலை 20 சனிக்கிழமை அரங்கேற்றம் காணும் மக்கள் அணிதிரண்டு கலந்து கொள்ள அழைக்கிறது அஸ்தானா ஆர்ட்ஸ் கலைமையம்

டெம்பல் ஆப் ஃபைன் ஆர்ட்சில் "சூர்ப்பனகை" நாடகம்
ஜூலை 20 சனிக்கிழமை அரங்கேற்றம் காணும்
மக்கள் அணிதிரண்டு கலந்து கொள்ள அழைக்கிறது அஸ்தானா ஆர்ட்ஸ் கலைமையம்

கோலாலம்பூர், ஜூலை 19-
அஸ்தானா ஆர்ட்ஸ் தோற்றுநர் ரவிசங்கர் எண்ணத்தில் உதிர்த்த "சூர்ப்பனகை" நாடகம் மறுவடிவம் கண்டு ஜூலை 20 சனிக்கிழமை இரவு  7.00 மணிக்கு டெம்பல் ஆப் ஃப்பைன் ஆர்ட்ஸ் நுண்கலை மையத்தில் நடைபெறவிருப்பதால் மக்கள் அணிதிரண்டு ஆதரவு தரும்படி அஸ்தானா ஆர்ட்ஸ் கலைமையம் வலியுறுத்தியுள்ளது


அஸ்தானா ஆர்ட்ஸ் கலை மையத்தை நிறுவி, அதன்வழி பல நாட்டிய நாடகங்களை படைத்து இளைஞர் சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திய ரவிசங்கர் இராமாயணத்தில் ஒரு முக்கியப்  பகுதியான  சூர்ப்பனகையை மையமாக வைத்து ஒரு முழுநீள நாடகத்தை  அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்று கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு எண்ணம் கொண்டு அதற்கான கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

இந்த சூர்ப்பனகை நாடகத்திற்காக இரவும் பகலும் கலைஞர்களைக் கொண்டு கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வந்த ரவிசங்கரின் திடீர்  மறைவுக்குப் பிறகு இந்த "சூர்ப்பனகை" நாடகம் உயிர்பெற்று தற்போது அரங்கேற்றம் காண தயாராகி விட்டது.

அதன் பலனாக ஏற்கெனவே இருந்த கலைஞர்களுடன்  புகழ்ப்பெற்ற 10 நடனக்குழுக்களின்  கலைஞர்களையும் இணைத்து 80 கலைஞர்களுடன் மிகவும் பிரமாண்டமான முறையில் "சூர்ப்பனகை நாடகம் வடிவமைக்கப்பட்டு அரங்கேற்றம் காண தயாராகி விட்டதாக அஸ்தானா  ஆர்ட்ஸ் தெரிவித்தது.

இந்த சூர்ப்பனகை நாடகத்தை கலை இயக்குநர் ரேய் மூவேந்திரன் இயக்கியுள்ளார். சூர்பநகை பகுதியில் இருந்து இராமாயணக் கதை எப்படி வந்தது என்ற நிலையில் இக்கதை வடிவமைக்கப்பட்டு நாடகமாக அரங்கேற்ற தயாராகி வருகிறது. பெரும் பொருட் செலவில் தயாராகிவரும் சூர்ப்பனகை நாடகத்தில் இரண்டு பாடல்கள் இயற்றப்பட்டு ஷாமினி பாடியுள்ளதோடு சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் நடித்தும் உள்ளார்.

இதில் டத்தோ கீதாஞ்சலி ஜி லங்கினி வேடத்தில் நடித்துள்ளார். மேலும் விஹாரா நடனகுழுவைச் சேர்ந்த குணா, அஸ்தானா ஆர்ட்ஸ், ஏரா நடனக் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் நடித்தும் நடன அமைப்பை மேற்கொண்டும் உள்ளனர். இந்த நாடகத்திற்கான ஒப்பனைகள் மிகவும் நுட்பமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது


இதில் நடிக்கவிருக்கும் ஒவ்வொரு கலைஞரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து நடிக்க கடும் பயிற்சியை மேற்கொண்டுள்ளனர். காதல், கோபம், இழப்பு, ஆங்காரம், அன்பு, பாசம், அமைதி என்பன போன்ற பல உணர்வுகளுடன் நடிக்கத் தயாராகி விட்டனர். இந்த சூர்ப்பனகை நாடகத்தில் சூர்ப்பனகையாக ஷாமினி நடிக்கவிருக்கிறார். இதற்காக உடை, அலங்காரம், முக ஒப்பனை, நடன அமைப்பு, ஒளி,ஒலி அமைப்பு, திரை அமைப்பு என்று பலவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு கூட்டு முயற்சியாக சூர்ப்பனகை களம் காணவிருக்கிறது.


மலேசியாவில் மேடை நாடகங்கள் அதுவும் இதுபோன்ற பொருள் பொதிந்த நாடகங்கள் அரங்கேற்றம் காண்பது மிகவும் அரிது என்பதால் இந்த சூர்ப்பகை நாடகத்தை காண மக்கள் அணிதிரண்டு வர வேண்டும். இதற்கான அழைப்பு அட்டைகளை வாங்கி ஆதரவு தரும்படி  அஸ்தானா ஆர்ட்ஸ் கேட்டுக் கொண்டுள்ளது. அழைப்பு அட்டைகளுக்கு 016-970 6106, 010-562 5311 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Comments