கோலாலம்பூர்- சிலாங்கூர் வர்த்தகச் சங்கத்தின் 90ஆம் ஆண்டு விழா 48 வர்த்தக சாதனையாளர்களுக்கு விருது தலைவர் டத்தோ இராமநாதன் தகவல்

கோலாலம்பூர்- சிலாங்கூர் வர்த்தகச் சங்கத்தின் 90ஆம் ஆண்டு விழா
48 வர்த்தக சாதனையாளர்களுக்கு விருது 
தலைவர் டத்தோ இராமநாதன் தகவல்

குணாளன் மணியம்

கோலாலம்பூர் ஜூலை 29-
மலேசிய வரலாற்றில் வெற்றிச் சுவடுகளை பதித்து வரும் பழைமை வாய்ந்த வர்த்தக சங்கமாக திகழும் கோலாலம்பூர்-சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் 90ஆம் ஆண்டு விழா மாபெரும் கொண்டாட்டமாக விருது விழாவுடன் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவிருப்பதாக அதன் தலைவர் டத்தோ இராமநாதன் கூறினார்.

ADVERTISEMENT
 ADVERTISEMENT

இந்த 90ஆம் ஆண்டு விழா செப்டம்பர் மாதம் 7ஆம் நாள் பங்சார் நெக்ஸஸ் மாநாட்டு மண்டபத்தில் கெஅடிலான் கட்சித் தலைவரும் வருங்கால. பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நம்பிக்கை கூட்டணி இந்திய அமைச்சர்கள் தலைமையில் நடைபெறவிருப்பதாக அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ இராமநாதன் தெரிவித்தார்.

கோலாலம்பூர்-சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கம் அமைக்கப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு இந்த மாபெரும் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 24 துறைகளில் சாதனை படைத்த 40 வர்த்தகர்களுக்கு சாதனையாளர்கள் விருது வழங்கப்படவுள்ளன. அதேநேரத்தில் 3 பேருக்கு பிளாட்டினம் தன்னிகரற்ற சாதனையாளர் விருது, 5 பேருக்கு சிறந்த தொழில்முனைவர்கள் விருது, 40 பேருக்கு தங்கச் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதாக இராமநாதன் சொன்னார்.இந்த விழாவில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்திய அமைச்சர்களுடன் அரசாங்க உயர் அதிகாரிகள், தனியார் துறை இயக்குநர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், அரசு சார்பற்ற இயக்கத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அழைக்கப்பட்டுள்ளதாக டத்தோ இராமநாதன் குறிப்பிட்டார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கோலாலம்பூர்- சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் உதவித் தலைவர் தமிழ்ச்செல்வம், செயலாளர் நிவாஸ் ராகவன், பொருளாளர் குமரகுரு, உச்சமன்ற உறுப்பினர்கள் முத்துப்பாண்டி, கோபால், சுரோஜ், டோனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேல் விபரங்களுக்கு
*0326931033* என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Comments