இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கும் நடப்பு அரசாங்க இந்திய அரசியல் தலைவர் யார்? டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் கேள்வி

இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கும் நடப்பு அரசாங்க இந்திய அரசியல் தலைவர் யார்?
 டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் கேள்வி

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஜூலை 5-
இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கும் நடப்பு அரசாங்க அரசியல் தலைவர் யார் என்று  ம.இ.கா தேசியத் தலைவர்
 டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ADVERTISEMENT ADVERTISEMENT


இந்தியர்களை பிரதிநிதிக்கு அரசியல் தலைவர்கள் நடப்பு அரசாங்கத்தில்  யாரும் இல்லை. அவர்கள் பல இன கட்சியை சார்ந்திருக்கிறார்கள். அவர்களால் இந்திய சமுதாயம் குறித்து பேச முடியாது. பிரச்சினை வரும் போது மட்டும் அறிக்கை விடுகிறார்கள். 

ஆனால், அப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இருந்து விடுகிறார்கள் என்று ம.இ.கா தலைமையகத்தில் மத்திய செயலவை கூட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் கூறினார்.

அரசாங்கத்தில் நான்கு அமைச்சர்கள் பொறுப்பு வகிக்கிறார்கள். அமைச்சரவை கூட்டத்தில் இந்தியர்களின் பிரச்சினை குறித்து யார் கேள்வி எழுப்புகிறார்கள்? நாங்கள் அனைத்தையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் மட்டுமல்ல மக்களும் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்றார் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன்.

இப்பிரச்சினைக்கு ம.இ.கா என்ன நடவடிக்கை எடுக்கும் என்று கேட்ட போது, நாங்கள் ஆட்சியில் இல்லை. எங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது. நாங்கள் நடப்பதை தொடர்ந்து கவனிப்போம். இப்போதைக்கு அதுதான் எங்கள் வேலை.

மக்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்போது அவர்கள் அமைதியாக இருந்தாலும் நேரம் வரும் போது முடிவெடுப்பார்கள் என்று டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

Comments