கழிப்பறையில் வழுக்கி விழுந்தார் மலேசிய சிம்ரன் திடீர் மரணம்

கழிப்பறையில் வழுக்கி விழுந்தார்
மலேசிய சிம்ரன் திடீர் மரணம்

கோலாலம்பூர் ஜூலை 15-
மலேசிய சிம்ரன் மலாக்காவில் உள்ள தமது இல்லத்தில் கழிப்பறையில் வழுக்கி விழுந்து திடீர் மரணமடைந்துள்ளார்.

மலேசிய "சிம்ரன்" எனும் அடைமொழியில் கலைத்துறையில் வலம் வந்த ராஜலெட்சுமி என்ற ராஜி இன்று திங்கட்கிழமை காலை 8.40 மணியளவில் கழிப்பறையில் வழுக்கி விழுந்தார். கழிப்பறைக்கு சென்ற ராஜலெட்சுமி வழுக்கி விழுந்ததை அவரது மைத்துநர் கணவரிடம்  தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு கழிப்பறைக்கு விரைந்த  கணவர் கீழே விழுந்து கிடந்த ராஜியிடம் பதற்றத்தோடு பேசிய போது கால் வலிக்கிறது என்றவர் சில நிமிடங்களில் மூர்ச்சையானார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வீட்டிற்கு விரைந்த மருத்துவர்கள் ராஜி மரணமடைந்து விட்டதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டனர்.

ரசிகர்களால் செல்லமாக ராஜி என்றழைக்கப்பட்ட சிம்ரன் பல திரைப்படங்களில் நடித்து புகழ்ப்பெற்றவர். கானா அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் வேளையில், அவரது குடும்பத்தினருக்கு தேசம ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

Comments