வாரணாசிக்கு சிறகை விரிக்கிறது ஏர் மலிண்டோ இன்று இரவு வெள்ளோட்டம் பயணம் தேசம், மக்கள் ஓசை, தமிழ் மலர் ,அநேகன் ,வணக்கம் மலேசியா ஊடகவியலாளர்கள் பங்கேற்பர்

வாரணாசிக்கு சிறகை விரிக்கிறது ஏர் மலிண்டோ
இன்று இரவு வெள்ளோட்டம் பயணம்
தேசம், மக்கள் ஓசை, தமிழ் மலர் ,அநேகன் , வணக்கம் மலேசியா ஊடகவியலாளர்கள் பங்கேற்பர்

கோலாலம்பூர், ஜூலை 18-
காசி என்றழைக்கப்படும் இந்துக்களின் புனிதத்தலமான  வாரணாசிக்கு ஏர் மலிண்டோ தன் சிறகை விரித்துள்ளது.

இன்று இரவு 7.00 மணிக்கு காசி நோக்கி  பறக்கவிருக்கும் மலிண்டோ ஏர் வெள்ளோட்டப் பயணத்தில் ஊடகவியலாளர்கள் பலர் செல்லவிருக்கின்றனர்.

தேசம் தோற்றுநரும் தலைமை ஆசிரியருமான குணாளன் மணியம் இந்த காசி வெள்ளோட்டப் பயணத்தில் பங்கேற்கிறார்.

அதேவேளையில் அநேகன் இணைய ஊடகத்தின் ஆசிரியர் தயாளன் சண்முகம், தமிழ்மலர் நாளேட்டின் துணையாசிரியர் புவனேஸ்வரன், மக்கள் ஓசை நிருபர் திருமதி செல்வி மற்றும் வணக்கம் மலேசியா நிருபர் ரமேஷ், பயண நிறுவன முகவர்கள் ஆகியோர் வாரணாசி பயணமாகவிருக்கின்றனர்.

இந்திய நேரப்படி இரவு 9.00 மணிக்கு காசி சென்று சேரும் மலிண்டோ ஏர் சிறப்பு விமானத்தின் மீது நீர் பாய்ச்சி கோலாகல வரவேற்பு நல்கப்படும். ஊடகவியலாளர்கள் மூன்று நாட்கள்  வாரணாசியில் தங்கி கங்கை நதி, அலாஹாபாத் கும்பமேளா நடைபெறும் நதிகளுக்கும் வருகை புரிவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலிண்டோ ஏர் விமான நிறுவனத்திற்கு ஊடகவியலாளர்கள் சார்பில் தேசம் குணாளன் மணியம் நன்றி தெரிவித்தார்.

Comments