வாரணாசிக்கு சிறகை விரித்த முதல் விமான நிறுவனம் மலிண்டோ ஏர் காசி-கோலாலம்பூருக்கு உறவு பாலத்தை ஏற்படுத்தும்

வாரணாசிக்கு சிறகை விரித்த முதல் விமான நிறுவனம் மலிண்டோ ஏர்
காசி-கோலாலம்பூருக்கு உறவு பாலத்தை ஏற்படுத்தும்

வாரணாசியில் இருந்து குணாளன் மணியம்

வாரணாசி, ஜூலை 19-
வாரணாசிக்கு சிறகை விரித்த முதல் ஆசிய  விமான நிறுவனமான மலிண்டோ ஏர்  காசி-கோலாலம்பூருக்கு இடையில் உறவு பாலத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்துக்களின் புனித்தளமாக கருதப்படும் காசி என்றழைக்கப்படும் வாரணாசிக்கு உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுப்பயணிகள் வரும் பட்சத்தில் மலிண்டோ ஏர் விமான நிறுவனம் வாரணாசிக்கு தன் பயணத்தை தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT


 ADVERTISEMENT

வாரணாசிக்குப் புறப்பட்ட முதல்  வெள்ளோட்டம் பயணத்தில் பயணிகளுடன்
தேசம், மக்கள் ஓசை, தமிழ் மலர், வணக்கம் மலேசியா ஊடகவியலாளர்கள் பங்கேற்றனர். 4 மணி 35 நிமிட பயணத்திற்குப் பிறகு வாரணாசி லால் பகதூர் சஷ்திரி விமான நிலையம் வந்தடைந்த மலிண்டோர் ஏர் விமானத்தின் மீது நீர்ப்பாய்ச்சி வரவேற்பு நல்கப்பட்டது.


விமான நிலையத்தில் அதிகாரிகள் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் புலப்படுத்தினர். அதன்பிறகு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வாரணாசி விமான நிலைய அதிகாரிகள்,  மலிண்டோ ஏர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இந்த வெள்ளோட்டப் பயணத்தில் தேசம் தோற்றுநரும் தலைமை ஆசிரியருமான குணாளன் மணியம்,  அநேகன் இணைய ஊடகத்தின் ஆசிரியர் தயாளன் சண்முகம், தமிழ்மலர் நாளேட்டின் துணையாசிரியர் புவனேஸ்வரன், மக்கள் ஓசை நிருபர் திருமதி செல்வி மற்றும் வணக்கம் மலேசியா நிருபர் ரமேஷ், பயண நிறுவன முகவர்கள் ஆகியோருடன் பயணிகளும் பங்கேற்றனர்.பத்திரிகையாளர் சந்திப்பு செய்திகள் இன்று பதிவேற்றம் செய்யப்படும்.


Comments