இந்திரா காந்தி புதல்வி பிரசன்னாவை மீட்க துன் மகாதீரை சந்திப்போம்! -இங்ஙாட் அதிரடி

இந்திரா காந்தி புதல்வி பிரசன்னாவை மீட்க துன் மகாதீரை சந்திப்போம்! 
-இங்ஙாட் அதிரடி

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 26-
இந்திரா காந்தியின் கடைசி மகள் பிரன்னா டீக்‌ஷாவை மீட்க பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் உதவியை நாடவிருப்பதாக இந்திரா காந்தி விவகார சிறப்பு பணிக் குழுவின் (இங்ஙாட்) தலைவர் அருண் துரைசாமி கூறினார்.

பிரசன்னா டீக்‌ஷாவை அவரின் பரமரிப்பில் வளர்க்க நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் அவரது முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் (பத்மநாபன்) குழந்தையை வழங்க இது நாள் வரை முன் வர வில்லை.

ADVERTISEMENT
 ADVERTISEMENT

பிரசன்னாவை கண்டுப்பிடித்து தாயாரிடம் ஒப்படைக்க தாங்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் அது தோல்வியில் முடிந்ததால் இறுதிகட்ட முயற்சியாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் உதவி நாடப்படும் என்று பெட்டாலிங் ஜெயா மலேசிய இந்து சங்கத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அருண் துரைசாமி அவ்வாறு தெரிவித்தார்.

இந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்திற்கு இன்னும் மாறாமல் இருக்கிறார் என்று நம்பப்படும் பிரன்னாவை இந்திரா காந்தியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்ற தரப்பு காவல் துறையிடம் உத்தரவிட்ட பின்பும் அவரையும் முகமட் ரிடுவானையும் இது நாள் வரை கண்டுபிடிக்க முடியாதது அதிர்ச்சியளிப்பதாக அருண் துரைசாமி சொன்னார்.

முகமட் ரிட்சுவான் பினாங்கில் உள்ள போக்குவரத்து துறையில் தன் வாகன வரியை புதுப்பித்துள்ளார். இரண்டாவது முஸ்லிம் மனைவி மூலம் பிறந்த 4 பிள்ளைகளுக்கு பதிவு இலாகாவில் பிறப்பு பத்திரம் எடுத்துள்ளார். தன் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க கல்வி

இலாகாவிற்கும் சென்றுள்ளார். இந்நிலையில் முகமட் ரிட்சுவான் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை என்று காவல் துறை கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என்று அருண் துறைசாமி குறிப்பிட்டார்.

முகமட் ரிட்சுவானுக்கு வேலை இல்லை. வங்கி கணக்கு இல்லை. ஆனால், வாழ்க்கை நடத்த முடிகிறது. இவருக்கு ஷாகிர் நாயக் ஆதரவாளர்கள் மற்றும் சில முஸ்லிம் அமைப்புகள் உதவி வருவதாக தெரியவந்துள்ளது என்றார் அருண் துரைசாமி.

ஒரு தனி நபரை 10 ஆண்டுகளாக கண்டுப்பிடிக்க முடியவில்லை என்பதை துளியளவும் ஏற்க முடியாது.எனவே பிரசன்னாவை கண்டு பிடித்து தாயாரிடம் ஒப்படைப்பது மட்டுமின்றி முகமட் ரிடுவானை சட்டத்தின் முன் நிறுத்தும் வரை இங்ஙாட்டின் போராட்டம் ஓயாது என அருண் அறைகூவல் விடுத்தார்.

இதனிடையே தன் மகள் பிரசன்னாவை தன்னிடம் ஒப்படைக்க பொதுமக்கள் உதவ வேண்டும் இந்திரா காந்தி கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார்.

Comments