இளைஞர் சக்தியை திரட்டி ஆட்சியை கைப்பற்றுவோம் -டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் சூளுரை

இளைஞர் சக்தியை திரட்டி ஆட்சியை கைப்பற்றுவோம்
-டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் சூளுரை

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஜூலை 27-
இளைஞர் சக்தியை திரட்டி ஆட்சியை கைப்பற்றுவோம் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் சூளுரைத்துள்ளார்.

இளைஞர் சக்தி மகத்தானது. இளைஞர்களால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதால் அடுத்த பொதுத்தேர்தலில் இளைஞர் சக்தியைக் கொண்டு ஆட்சியை கைப்பற்றுவோம் என்று தலைநகர் ஸ்ரீ மலேசியா தங்குவிடுதியில் ம.இ.கா இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் அவ்வாறு தெரிவித்தார்.

ADVERTISEMENT
 ADVERTISEMENT

இளைஞர்கள் 18 வயதில் ஓட்டு போடும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை ம.இ.காவிற்கு லாபம்தான். இளைஞர்கள் பிடிபிடிஎன் விவகாரத்தில் ஆத்தி்மடைந்துள்ளனர். எஸ்.பி.எம் முடித்த மாணவர்களுக்கு ஓட்டுரிமை இருக்கிறது. இதனை ம.இ.கா இளைஞர்கள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் கேட்டுக் கொண்டார்.

நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் இளைஞர்களுக்கு என்ன செய்தது? பிடிபிடிஎன் வாக்குறுதி பொய்யானது. பொய்க்கு மேல் பொய். இந்தியர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. ஆனால், தேசிய முன்னனி ஆட்சியில் இருந்த போது இந்திய மாணவர்களுக்காக டேஃப் கல்லூரி, ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், உயர்கல்வி மாணவர்களுக்கு கடன் வழங்கும் பொருட்டு  எம்.ஐ.டி உள்ளிட்ட பல கல்வி மையங்கள் அமைக்கப்பட்டன.

தோட்டத் துண்டாடல் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு துன் சம்பந்தன் தொழிலாளர்களுக்காக  தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கம், டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் முயற்சியில் நேசா கூட்டுறவு கழகம் போன்றவை அமைக்கப்பட்டது. ஒரு அரசியல் கட்சியாக இருந்து ம.இ.கா நடத்திய சாதனைகள் இவை என்றார் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன்.

டேஃப் கல்லூரி இதுவரை 44 ஆயிரம் இளைஞர்களுக்கு டிப்ளோமா கல்வியை வழங்கியுள்ளது. எம்ஐஇடி மூலம் 14 கோடியே 50 கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் இந்திய சமுதாய நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ம.இ.காவிற்கு ஆதரவு இருக்க இல்லை என்பதெல்லாம் சுத்தப் பொய். இந்த மண்டபத்தில் இளைஞர்கள் திரண்டு வந்திருக்கிறார்கள். ம.இ.கா இளைஞர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றி இருக்கிறார்கள். இளைஞர் சக்தி மகத்தானது என்பதை அனைவரும் அறிவர். இதனை மேலும் வலுப்படுத்தவே பாஸ் கட்சியுடன் இணைந்துள்ளோம். அடுத்த பொதுத்தேர்தலில் இளைஞர் சமுதாயத்தை கொண்டு புதிய மலேசிய தேசத்தை உருவாக்குவோம் என்று மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

Comments