வேதமூர்த்தியின் எம்.ஏ.பி கட்சி ம.இ.காவுக்கு மிரட்டல் இல்லை!இந்தியர்களின் தனிப்பட்ட அதரவு ம.இ.காவுக்கு உண்டு! -டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் குணாளன் மணியம்

வேதமூர்த்தியின் எம்.ஏ.பி கட்சி ம.இ.காவுக்கு மிரட்டல் இல்லை!இந்தியர்களின் தனிப்பட்ட அதரவு ம.இ.காவுக்கு உண்டு!
-டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஜூலை 16-
பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி அமைத்துள்ள எம்.ஏ.பி கட்சி ம.இ.காவும் மிரட்டல் இல்லை என்று அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.

எம்.ஏ.பி கட்சி உதயத்தில் எங்களுக்கு எந்த பயமும் பயமில்லை. இந்தியர்களின் தனிப்பட்ட ஆதரவு ம.இ.காவிற்கு என்றும் உண்டு் என்று டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

ம.இ.கா மூத்த கட்சி. 60 ஆண்டுகள் பழைமையான கட்சி. அக்கட்சிக்கு என்று தனிப்பட்ட ஆதரவு இந்தியர்கள் மத்தியில் இருக்கிறது. எங்கள் பணியை தொடர்ந்து மேற்கொள்வோம். அக்கட்சி குறித்து நாங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை என்றார் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன்.

Comments