பெட்டாலிங் ஜெயா, ஜாலான் பாராட் சாலைக்கு வீ.டேவிட் பெயரை சூட்ட மறுப்பது ஏன்? இந்திய பிரதிநிதிகள் பதில் சொல்வார்களா?

பெட்டாலிங் ஜெயா, ஜாலான் பாராட் சாலைக்கு வீ.டேவிட் பெயரை சூட்ட மறுப்பது ஏன்?
இந்திய பிரதிநிதிகள் பதில் சொல்வார்களா?

கோலாலம்பூர்,ஜூலை 7-
தங்களின் சொந்த கட்சிக்காகவும் சமுதாயத்திற்காகவும் உழைத்த மூத்த அரசியல்வாதி டாக்டர் வீ.டேவிட் பெயரை பெட்டாலிங் ஜெயா, ஜாலான் பாராட் சாலைக்கு சூட்ட மறுப்பது ஏன் என்று தேசிய ம.இ.கா தகவல் பிரிவு செயலாளர் சுபாஸ் சந்திரபோஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தங்கள் கட்சித் தலைவருக்கு குரல் கொடுக்க முடியாத இவர்களா மலேசிய இந்தியர்களுக்கு குரல் கொடுக்க போகின்றார்கள்.கடந்த 1959ஆம் ஆண்டுகளில் தோட்டத் தொழிலாளர் நலனுக்காக போராடிய சிறந்தத் தலைவர் வீ.டேவிட். அவரை பெயரை புறக்கணிப்பது ஏன் என்று சுபாஸ் சந்திரபோஸ் கேட்டார்.

வீ.டேவிட் தமது 26ஆம் வயதிலேயே நாட்டின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். 1958ஆம் ஆண்டில் அவசர சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். இவரின் முயற்சியால் மே 1ஆம் திகதி நம் நாட்டில் தொழிலாளர் தினமாக கொண்டாப்படுகிறது.

இவர் ஆற்றிய சேவைக்காக 2010ஆம் ஆண்டு, பெட்டாலிங் ஜெயா, பாராட் சாலையை, வீ.டேவிட் சாலையாக மாற்ற அப்போதைய சிலாங்கூர் மாநில முதலமைச்சர் டான்ஸ்ரீ காலிட் கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. இந்த பரிந்துரைக்கு காலிட் ஏகமனதாக ஏற்றுக் கொண்டார்.

நாடறிந்த மூத்த அரசியல் ஆய்வாளர் கூ கை லிம் மறைவுக்கு ஜாலான் சிகாமட் சாலையை அவர் பெயருக்கு மாற்ற உறுதிப்படுத்தபட்டது.
அப்படியானால் பெட்டாலிங் ஜெயா, ஜாலான் பாராட் சாலைக்கு அமரர் டாக்டர் வீ.டேவிட் பெயரை சூட்ட செய்யப்பட்ட என்னவானது என்று சுபாஸ் கேள்வி எழுப்பினார்.

பலர் இந்த கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால், எதுவுமே  நடக்காதது போல் வாயை மூடிக்கொண்டிருக்கும் பாகத்தான் ஹாராப்பான் இந்திய பிரதிநிதிகள் வாயைத் திறப்பார்களா?

தங்களின் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு கூட வாய் திறக்காத இவர்கள், நாட்டில் உள்ள இந்தியர்களின் பிரச்சினைகளுக்கு எப்படி வாய் திறப்பார்கள்? மக்கள் சிந்திக்க வேண்டும் என்று சுபாஷ் சந்திரபோஸ் குறிப்பிட்டார்.

Comments