தேசம் ஊடக சாதனையாளர்கள் விருது விழா 130 சாதனையாளர்களுக்கு விருது வழங்கி முத்திரை பதித்தது தேசம் குழுமம்!

தேசம் ஊடக சாதனையாளர்கள் விருது விழா
130 சாதனையாளர்களுக்கு விருது வழங்கி முத்திரை பதித்தது தேசம் குழுமம்!

முனைவர் வெங்கடேஷ் சங்கையா

கோலாலம்பூர், ஆகஸ்ட் 31-
தேசம் ஊடக சாதனையாளர்கள் விருது விழாவில் 130  சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி தேசம் குழுமம் பத்திரிகை வரலாற்றில் முத்திரை பதித்தது.

பத்திரிகை துறையில் 28 ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ள குணாளன் மணியம் தலைமையில் செயல்படும் தேசம் ஊடகம், இரண்டாவது முறையாகத் தேசம் சாதனையாளர் விழாவை மிக விமரசையாக ஏற்பாடு செய்திருந்தது.இந்த விருது விழாவிற்குப் பிரதமர் துறை அமைச்சர் பொன் வேதமூர்த்தித் தலைமையேற்றார். பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சிவகுமார், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த விழாவில் ஊடகத் துறை, கலைத்துறை, விளையாட்டுத் துறை, வர்த்தகத் துறை, அரசு சார்பற்ற நிறுவனம், ஆசிரியர்கள், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் என்று 10 பிரிவுகளில்  130 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.


வாழ்நாள் சாதனையாளர் விருது 10 பேருக்கு வழங்கப்பட்டது. அனைத்துலக பிரிவில் கலைஞர்கள், தொழிலதிபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த நாடாளுமன்றம், சட்டமன்ற விருதுகள் என்று பல சாதனை விருதுகள் வழங்கப்பட்டன.

மலேசிய பத்திரிகை வரலாற்றில் சாதனையாளர்களை முதல் பத்திரிகை நிறுவனமாகத் திகழும் தேசம் குழுமம் இரண்டாவது முறையாக சாதனையாளர்களுக்கு 130 விருதுகள் வழங்கி மலேசிய பத்திரிகை வரலாற்றில் முத்திரை பதித்தது.


Comments