மித்ரா கல்வி நிதி உதவித் திட்டம் செப்டம்பர் 6ஆம் நாளுக்குள் ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்

மித்ரா கல்வி நிதி உதவித் திட்டம்
செப்டம்பர் 6ஆம் நாளுக்குள் ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்


கோலாலம்பூர், ஆக.31-
பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தியின் கண்காணிப்பில் செயல்படுகின்ற இந்தியர் உருமாற்றப் பிரிவான மித்ரா சார்பில் மாணவர் சமூகத்திற்கு உதவும் வகையில் சிறப்புத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் உயர்க்கல்வி நிலையங்களில் பயில 2019-2020 கல்வித் தவணைக்கு வாய்ப்பு கிடைத்துள்ள ஏழை மாணவர்கள், கல்வி உதவி நிதியைப் பெறலாம் என்று இதன் தொடர்பில் மித்ரா சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி-40 குடும்பங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்கள், உயர்க் கல்வி நிலைய நுழைவு கிடைத்ததும் நூல்கள், குறிப்பேடுகள், கல்வி உபகரணப் பொருட்கள், மடிக் கணினி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக ஈராயிரம் வெள்ளி உதவி நிதி அளிக்கப்படும். இந்தக் கல்வி உதவி நிதி, இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி இருப்பு, சம்பந்தப்பட்ட மாணவரின் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் மாற்றத்திற்கு உட்பட்டது.

எனவே, 2019-2020 கல்வித் தவணைக்காக இளங்கலைப் பட்டம், டிப்ளோமா என்னும் பட்டயக் கல்விக்காக உயர்க்கல்வி நிலையங்களில் வாய்ப்பு கிடைத்துள்ள பி-40 இந்தியக் குடும்ப மாணவர்கள் https://forms.gle/mmmQYdDmShQoaVDD6 எனும்  இணையப் பக்கத்தின் மூலம் செப்டம்பர் 6-ஆம் தேதிக்குள் இந்த உதவி
விண்ணப்பம் செய்யலாம்.

 செப்டம்பர் 7 முதல் 14-ஆம் நாள் வரை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு செப்டம்பர் 15 முதல் 28-ஆம் நாள் வரை  இந்த உதவி நிதி அளிக்கப்படும் என்று மித்ரா வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் விவரத்திற்கு 03-8886 6252 & 03-8889 3451 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Comments