பொன்.வேதமூர்த்தி மீது சபா இந்தியர்கள் நம்பிக்கை - டத்தோ நாகராஜன்

பொன்.வேதமூர்த்தி மீது சபா இந்தியர்கள் நம்பிக்கை
- டத்தோ நாகராஜன் 

கோத்தாகினபாலு, ஆக.2-
சபாவாழ் இந்தியர்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டிருக்கும் சமூகப் பிரச்சனைகள்,  கல்வி மற்றும் வேலை வாய்ப்பு, பொருளாதார மேம்பாடு, வழிபாட்டுத் தள சிக்கல், அடையாள ஆவண சிக்கல் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளும் கட்டம் கட்டமாக, அதேவேளை கூடிய விரைவில் தீர்க்கப்படும் என்று மாநில இந்தியர்கள் நம்புவதாக சபா இந்தியர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் டத்தோ அ.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் முதல் நாள் வியாழக்கிழமை மாலையில் கோத்தாகினபாலுவில் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அவர்களுடன் சபா இந்தியர் அரசுசாரா அமைப்புகளின் பிரதிகள் கலந்துரையாடிய நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT
 ADVERTISEMENT

லகாட் டத்தோ, சண்டாகான், தாவாவ், லாபுவான்  உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அரசு சாரா அமைப்புகள், சபா இந்தியர் சங்கம், சபா இந்து சங்கம், லொகாவி ஆலயம், அருள்மிகு பசுபதிநாதர் ஆலயம், சபா மலேசியப்  பல்கலைக்கழக இந்தியப் பிரதிநிதி, சபா இந்திய முஸ்லிம் வர்த்தக சங்கம் ஆகிய அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் இங்கு வாழ்கின்ற இந்தியர் தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக நாகராஜன் தெரிவித்தார்.

இதில் கலந்து கொண்ட அனைவரின் கருத்துகளையும் அமைச்சர் பொறுமையாக கேட்டறிந்தர். எல்லோருக்கும் விளக்கம் அளித்த அமைச்சர், எல்லாப் பிரச்னைகளுக்கும் உரிய தீர்வு எட்டப்படும் என்றார்.

ஏறக்குறைய அறுபது பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், ஒவ்வொரு தரப்பினரும் எழுப்பிய கேள்விகளுக்கு தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை  அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி மனநிறைவான பதிலை அளித்தார் என்றும், இதுவரை எந்த அமைச்சரும் இப்படி நேரம் ஒதுக்கி சபாவில் வசிக்கின்ற இந்தியர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்னை பற்றி கேட்டறிந்தது இல்லை என்றும் சமூக நல ஆர்வலருமான டத்தோ நாகரஜான் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments