தேசம் சாதனையாளர் விருது விழா மலேசிய மண்ணில் சேலம் ஆர்.ஜே. குட்டி பிரகாஷ், இர்பான் இருவருக்கும் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு

தேசம் சாதனையாளர் விருது விழா
மலேசிய மண்ணில் சேலம் ஆர்.ஜே. குட்டி பிரகாஷ், இர்பான் இருவருக்கும் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு

தேசம் செய்தியாளர் டாக்டர் வெங்கடேஷ் சங்கையா

கோலாலம்பூர், ஆக.31-உலகத் தமிழர்களுக்கு தன் தங்கக்குரலால் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் வெற்றி  கண்ட சேலம் ஆர்.ஜே குட்டி பிரகாஷ் மற்றும் அதற்கு எழுத்து வடிவம் தந்த சேலம் இர்பான் இருவருக்கும் மலேசிய மண்ணில்  தேசம் ஊடக சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேசம் ஊடக சாதனையாளர்  விருது விழாவில் நல்ல கருத்துகளை வாட்ஸ்ஆப் வழி தன் தங்கக் குரலால் பதிவு செய்து உலக மக்களுக்கு வழங்கி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கி வெற்றி கண்ட சேலம் ஆர்.ஜே.குட்டி பிரகாஷ் அவர்களுக்கு தங்கக் குரல் நாயகன் விருது
கௌரவிக்கப்பட்டது.

அதேநேரத்தில் அந்த குரல் பதிவிற்கு சிறந்த எழுத்துப் படிவங்களை வழங்கி உயிர் கொடுத்த சேலம்  இர்பான் அவர்களுக்கு சிறந்த எழுத்து வடிவமைப்பாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மலேசியாவில் ஆர்.ஜே.குட்டி பிரகாஷின் குரல் அதிகமாக பகிரப்பட்டது. இதற்கு தேசம் சிறந்த குரல் பதிவிற்கான விருதையும்   வழங்கியது.
உலகத் தமிழர்களுக்கு நல்ல கருத்துகளை தன் குரலால் பதிவு செய்து
செவியில் ஊடுருவி  உலக மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த, அதுவும் மலேசிய மக்களால் அதிகமாக பகிரப்பட்ட, பேசப்பட்ட  சேலம் ஆர்.ஜே. குட்டி பிரகாஷ், இர்பான் இருவரின் சேவைக்கான அங்கீகாரம் இதுவாகும் என்று தேசம் குணாளன் மணியம் தெரிவித்தார்.

மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சிவகுமார் இந்த விருதுகளை குட்டி பிரகாஷ் மற்றும் இர்பான் இருவருக்கும் வழங்கி கௌரவித்தார். இவர்கள் மேலும் பல சாதனைகள் படைத்து தமிழுக்கும் உலகத் தமிழருக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
இந்த விருதுகளை மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சிவகுமார் வழங்கி கௌரவித்தார்.

ஆர்.ஜே.குட்டி பிரகாஷ், இர்பான் இருவரும் விருது வாங்கிய போது மலேசியா  மற்றும் சென்னையை சேர்ந்த பூமித்ரா லென்ஸ் கேப்பிங் நிறுவனர் , சமூக ஆர்வலர் , டாக்டர் வெங்கடேஷ் சங்கையா உடன் இருந்தார்.என்பது குறிப்பிடத்தக்கது

Comments