சின்னத்திரை நட்சத்திர கலைவிழா! மலேசிய கலைஞர்கள், சின்னத்திரை முன்னனி நட்சத்திரங்கள் வருகை விஜய் சேதுபதி, நாசர் பங்கேற்பு

சின்னத்திரை நட்சத்திர கலைவிழா!
மலேசிய கலைஞர்கள்,  சின்னத்திரை முன்னனி நட்சத்திரங்கள் வருகை 
விஜய் சேதுபதி, நாசர் பங்கேற்பு

குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஆகஸ்டு, 15-
மலேசிய கலைஞர்கள்,  சின்னத்திரை முன்னனி நட்சத்திரங்கள் கலக்கவிருக்கும் சின்னத்திரை நட்சத்திர கலைவிழா நிகழ்ச்சியில் பிரபல நடிகர்
விஜய் சேதுபதி, நாசர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கவிருப்பதாக ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த சங்கமம் சுப்ரா கூறினார்.

இந்த சின்னத்திரை நட்சத்திர கலைவிழா செப்டம்பர் 28 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கோலாலம்பூர், செராஸ் பி.ஜி.ஆர்.எம் மண்டபத்தில் நடைபெறவிருப்பதாக அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சங்கமம் சுப்ரா தெரிவித்தார்.

ஈவென்ட் ஹிரோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் சேதுபதி, நாசர் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக பங்ஙகேற்கின்றனர். இதில் சின்னத்திரையைச் சேர்ந்த நளினி, சின்னி ஜெயந்த், மனோ பாலா, மகாலட்சுமி உள்ளிட்ட பிரபல சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கவிருப்பதாக சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் மனோ பாலா சொன்னார்.

இந்த சின்னத்திரை நட்சத்திர கலைவிழா நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட சின்னத்திரை நட்சத்திரங்களுடன் 40 மலேசிய  நட்சத்திரங்களும் கலக்கவிருக்கின்றனர். நாம் அனைவரும் மலேசிய கலைஞர்களுக்காக இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதில் மலேசிய கலைஞர்கள் சங்கமம் இசைக்குழு, ஏரா நடனக்குழு, பாடகர்கள் ஹரிஹரன், கலைவாணி, சித்திரன், லோகேஸ்வரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்கவிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் வழி கிடைக்கும் நிதியின் ஒரு பகுதி சுங்கை பூலோ மக்கள் பொதுநல இயக்கம், மலேசிய இந்திய இசைகலைஞர்கள் நல்லின இயக்கம், புக்கிட் ஜாலில் ரோட்டரி கிளப் ஆகியவற்றுக்கு வழங்கப்படும். இந்த சின்னத்திரை நட்சத்திர கலைவிழா நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டு தமிழ்நாட்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கப்படும் என்று சங்கமம் சுப்ரா தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சி மலேசிய- இந்திய கலைஞர்களின் உறவை மேம்படுத்தவே நடைபெறுகிறது. பணம் சம்பாதிக்கும் நோக்கம் எதுவும் இல்லை என்று இதன் இந்திய சின்னத்திரை நட்சத்திர ஒருங்கிணைப்பாளர் திரு. பாலு என்ற பாலசுப்பிரமணியம் குறிப்பிட்டார். தொடர்புக்கு சுப்ரா- 016-3310288, ராஜ் 016-3229550

Comments