இயற்கை விவசாயத்திற்கு உயிர் கொடுக்கும் மதுரை தொழிலதிபர் செந்தில் குமரனுக்கு "விவசாய பசுமை நாயகன்" விருது

இயற்கை விவசாயத்திற்கு உயிர் கொடுக்கும் மதுரை தொழிலதிபர் செந்தில் குமரனுக்கு "விவசாய பசுமை நாயகன்" விருது

தேசம் செய்தியாளர் 
டாக்டர் வெங்கடேஷ் சங்கையா

கோலாலம்பூர், ஆக.31- இயற்கை விவசாயத்திற்கு உயிர் கொடுத்து வரும் தமிழ்நாடு, மதுரையைச் சேர்ந்த சத்தியம் தொழில் குழுமத் தலைவர் திரு.செந்தில் குமரன் அவர்களுக்கு மலேசிய மண்ணில் அனைத்துலக பிரிவில் "விவசாய பசுமை நாயகன்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் புகழ்ப்பெற்ற மின்னியல் ஊடகமாகத் திகழும்
தேசம் ஊடகம் கடந்த ஆகஸ்டு 24 சனிக்கிழமை  நடத்திய  2018, 2019ஆம் ஆண்டிற்கான தேசம் சாதனையாளர்  விருது விழாவில் தமிழ்நாடு, மதுரையைச் சேர்ந்த செந்தில் குமரன் இயற்கை மண் விவசாயத்திற்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறார்.


இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் வழங்கி செந்தில் குமரன் இயற்கை உரம், இயற்கை கால்நடை வளர்ப்பு என்று அனைத்தையும் இயற்கையாக மேற்கொண்டு வருவதன் காரணமாக "விவசாய பசுமை நாயகன்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக தேசம் ஊடகத் தோற்றுநர் குணாளன் மணியம் தெரிவித்தார்.

மண்ணை நம்பி விவசாயம் செய்ய வேண்டும் என்பதற்காக இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்தவம் வழங்கி தமிழகத்தில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் செந்தில் குமரனுக்கு "விவசாய பசுமை நாயகன்" பொருத்தமான விருதாகும் என்று குணாளன் மணியம் சொன்னார்.இந்த தேசம் ஊடக சாதனையாளர் விருது விழாவில் மேலும் 8 தமிழ்நாட்டு சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் மொத்தம் 130 சாதனையாளர்களுக்கு  விருதுகள் வழங்கி தேசம் வரலாற்று பதிவில் இடம்பெற்றது.

Comments