தேசம் ஊடக சாதனையாளர்கள் விருது விழா டத்தோ அப்துல் மாலிக்கிற்கு சிறந்த தேசிய இளைஞர் விருது

தேசம் ஊடக சாதனையாளர்கள் விருது விழா
டத்தோ அப்துல் மாலிக்கிற்கு சிறந்த தேசிய  இளைஞர் விருது

கோலாலம்பூர், -
நாட்டில் இளம் வயதில் பல்வேறு தன்னலமற்ற பொதுச் சேவைகளை மேற்கொண்டு வரும் பிரபல தொழிலதிபர் டத்தோ அப்துல் மாலிக்கிற்கு சிறந்த தேசிய இளைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.


தொண்டு என்பது தன்னமற்ற ஒரு சேவை. சமுதாய மக்களுக்கு உதவி வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில்  ஏழை மக்களுக்கு இளம் வயதில் உதவி வருகிறார் டத்தோ அப்துல் மாலிக்.

மாலிக் ஸ்டிரீம்ஸ், மாலிக் காப்பரேஷன் நிறுவனங்கள் வழி திரைப்பட துறை உள்ளிட்ட பல்வேறு வர்த்தகத் துறையில் ஈடுபட்டு வரும் டத்தோ மாலிக், தமிழ்ப்பள்ளி மாணவர்கள், மலாய்ப் பள்ளி மாணவர்கள், ஏழை குடும்பங்கள் என்று பலருக்கு உதவி வழங்கி வரும் டத்தோ மாலிக்கிற்கு தேசம் ஊடக சாதனையாளர்கள் விருது விழாவில் சிறந்த தேசிய இளைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. டத்தோ மாலிக் சார்பில்  அவரது பிரதிநிதியாக அலெக்‌ஸ்@ நவநீத் பிள்ளை பெற்று கொண்டார்.

இந்த விருது விழாவிற்குப் பிரதமர் துறை அமைச்சர் பொன் வேதமூர்த்தித் தலைமையேற்றார். பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சிவகுமார், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments